செந்தில் ராமமூர்த்தி

செந்தில் ராமமூர்த்தி (பிறப்பு மே 17, 1974) ஒரு அமெரிக்கா நடிகர் ஆவார். சிக்காகோவில் தமிழ் தாய், தந்தையருக்குப் பிறந்த செந்தில் ராமமூர்த்தி சான் அன்டோனியோவில் வளர்ந்தார். அமெரிக்கத் தொலைக்காட்சியில் "ஹீரோஸ்" என்ற தொடரில் ஒரு மரபியல் அறிவியலாளராக நடித்துப் புகழ் அடைந்தார்.

செந்தில் ராமமூர்த்தி

செந்தில் ராமமூர்த்தி, 2007
பிறப்பு மே 17, 1974 (1974-05-17) (அகவை 50)
சிக்காகோ, இலினொய், ஐக்கிய அமெரிக்கா
தொழில் நடிகர்
துணைவர் ஓல்கா சொஸ்நொவ்ஸ்கா
பிள்ளைகள் ஹலினா

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

அமெரிக்காவின் சிக்காகோ நகரில் இந்திய பெற்றோரிற்குப் பிறந்தார் செந்தில் ராமமூர்த்தி. இவரது தந்தையார் ஒரு கன்னட இனத்தவர் என்பதும் தாயார் தமிழ் இனத்தவர் என்பதையும் குறிப்பிடவேண்டும். செந்திலின் பெற்றோர்கள் வைத்தியர்களாக இருந்ததுடன் பெங்களூரில் இருந்து அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தார்கள். இவரிற்கு ஒரு சகோதரி உள்ளமையுடன் அந்த சகோதரியும் ஒரு வைத்தியராக பணிபுரிகின்றார். 1991 கீ நோட் பாடசாலையில் பட்டம் பெற்றார் செந்தில். ஒல்கா எனும் நடிகையை திருமணம் செய்த செந்திலுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

டப்ஸ் பல்கலைக்கழகத்தில் இணைந்து மருத்துவத் துறையில் தனது வாழ்க்கையை ஆரம்பித்தாலும் இடையில் நடிப்புத் துறையில் ஆர்வம் கொண்டு நடிப்புத்துறையில் கவனத்தைச் செலுத்தினார். 1999ம் ஆண்டு செந்தில் அவர்கள் வரலாறு துறையில் பட்டம் பெற்றார் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

தொழில்

தொகு

ஆரம்பத்தில் நாடகத்துறையில் ஆர்வம் காட்டிய செந்தில் பிற்காலத்தில் ஹீரோஸ் எனும் தொலைக்காட்சித் தொடர் மூலம் உலகப் புகழ் பெற்றார். சென்னையைச் சேர்ந்த ஒரு மரபணு ஆராய்ச்சி செய்யும் ஒரு பேராசிரியராக இந்தப் பாத்திரத்தில் செந்தில் நடித்தார். ஆரம்பத்தில் இந்தப் பாத்திரம் 54 வயதான ஒருவருக்கே வடிவமைக்கப்பட்டிருந்தாலும் செந்திலின் திறமையைக் கண்டு இவரின் வயதிற்கு ஏற்றவாறு பாத்திரத்தை மாற்றியமைத்தனர் தயாரிப்பாளர்கள்.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=செந்தில்_ராமமூர்த்தி&oldid=2905336" இலிருந்து மீள்விக்கப்பட்டது