செந்தூரா மாம்பழம்

செந்தூரா மாம்பழம் (Sendura mango) என்பது மாம்பழங்களில் ஒரு வகையாகும். இது மாம்பழங்கள் காய்க்கும் பருவத்தில் முன் பருவத்தில் காய்க்கும் இரக மாம்பழமாகும்.[1][2] இது நடுத்தர வளர்ச்சிக் கொண்டது. இவ்வகை மாம்பழங்கள் சிறியதாக உள்ளவை. நல்ல இருப்புத்தன்மைக் கொண்டதால் நீண்டதொலைவுக்கு எடுத்துச்செல்லலாம். இது நல்ல சுவை உடையதாகவும், நறு மணம் உடையதாகவும் உள்ளது. கெட்டியான சதைப்பற்றுடன், ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிறசதைப்பற்றுக் கொண்டது.[3]

செந்தூரா மாம்பழங்கள்

மேற்கோள்

தொகு
  1. http://www.tnaugenomics.com/mango/new.php?s=Sendura[தொடர்பிழந்த இணைப்பு]
  2. http://www.dinamalar.com/news_detail.asp?id=1230396
  3. ஆறாவது அகில இந்திய மாங்கனி விழா மலர்,கிருட்டிணகிரி,தர்மபுரி மாவட்டத்திற்கேற்ற மா இரகங்கள். கட்டுரை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செந்தூரா_மாம்பழம்&oldid=3382518" இலிருந்து மீள்விக்கப்பட்டது