செனான் அறுபுளோரோரோடேட்டு

செனான் அறுபுளோரோரோடேட்டு (Xenon hexafluororhodate) என்பது XeRhF6 என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்டுள்ள மந்தவாயு சேர்மமாகும். முதன்முதலில் 1963 ஆம் ஆண்டில் நீல் பார்ட்லெட் என்பவரால் தொகுப்பு முறையில் இச்சேர்மம் தயாரிக்கப்பட்டது.[1]. செனான் அறுபுளோரோபிளாட்டினேட்டுடன் ஒத்த அமைப்பை செனான் அறுபுளோரோரோடேட்டும் பெற்றுள்ளது.

செனான் அறுபுளோரோரோடேட்டு
பண்புகள்
XeRhF6
வாய்ப்பாட்டு எடை 348.1855 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தொகுப்புமுறை தயாரிப்பு

தொகு

செனானுடன் நேரடியாக ரோடியம் அறுபுளோரைடு சேர்த்து வினைப்படுத்தினால் செனான் அறுபுளோரோரோடேட்டு தயாரிக்க முடியும்.:[1]

Xe + RhF6 → XeRhF6

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Pauling, Linus. General Chemistry. 3rd. San Francisco: Dover, 1970. 250. Print.