செனான் நச்சு

செனான் நச்சு (Xenon poisoning) என்பது அணு உலைகளில் அயோடின்-135 இன் பீட்டா சிதைவினால் சேகரிக்கப்படும் செனான்-135 நச்சு ஆகும்.

செனான் என்பது அணு எண் 54 ஐயும் அணுநிறை 131.3 ஐயும் கொண்ட ஒரு தனிமமாகும். மெண்டலியேவின் தனிம அட்டவணையில் சுழியத் தொகுதியில் உள்ள கனமான செயல்திறன் அற்ற வளிமமாகும். இயற்கையில் இவ்வளிமத்தின் கலவை ஒன்பது ஐசோடோப்புகளைக் கொண்டுள்ளது. 124 முதல் 136 வரை அவைகளின் அணுநிறை உள்ளன. அணு உலைகளில் யுரேனியம் பிளவுறும் போது 131 முதல் 145 வரை அணுநிறை கொண்ட பத்து கதிரியக்கமுடைய ஐசோடோப்புகள் வெளிப்படுகின்றன. உலையின் செயல்பாட்டிற்கு அதிக கேடு தரும் கரு 135 ஆகும். இது அதிக வெப்ப நியூத்திரான்களை எளிதாக ஏற்கிறது. இந்தக்கரு எரிகோலில் (Fuel rod) கொஞ்சம் கொஞ்சமாகச் சேரும் போது எரிகோலை நச்சுப்படுத்தி, யு-235 எரிகோலையே முழு பயன்பாட்டிற்கு முன்பே மாற்றவேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்துகிறது.

இயற்கையில் யு-235 மற்றும் யு-238 இவைகளின் சிதைவு காரணமாக செனான் கிடைக்கிறது. செனான்/யுரேனியம் இவைகளின் நிறை விகிதத்திலிருந்து, யுரேனியத் தாதுவின் உண்மையான வயதினைக் கணிக்கலாம்.

உசாத்துணை

தொகு

The Atom from A to Z. K.Gladkov. Mir Publishers Moscow 1971

"https://ta.wikipedia.org/w/index.php?title=செனான்_நச்சு&oldid=1488189" இலிருந்து மீள்விக்கப்பட்டது