சென்னை கணிதவியல் கழகம்

சென்னையில் உள்ள கல்வி, ஆய்வு கழகம்

சென்னை கணிதவியல் கழகம் (Chennai Mathematical Institute) சென்னையில் அமைந்துள்ள கல்வி, ஆய்வுக் கழகம். இங்கு இயற்பியல், கணிதம், கணினியியல் படிப்புகள் வழங்கப்பட்டாலும், கணிதப் படிப்பு உயராய்வுப் படிப்பாக வழங்கப்படுகிறது. இது 1989 இல் தொடங்கப்பட்டு, இளநிலை, முதுநிலை படிப்புகள் வழங்கப்படுகின்றன. தொடக்க காலத்தில் தி. நகரில் அமைந்திருந்த இதன் வளாகம் பின்னர் சிறுசேரியின் சிப்காட் தொழினுட்பப் பூங்காவிற்கு மாற்றப்பட்டது. இதன் கலை, அறிவியல் நிகழ்வான ஃபியெஸ்டா ஆண்டுக்கொரு முறை நடைபெறுகிறது.

சென்னை கணிதவியல் கழகம்
வகைஆய்வு மற்றும் கல்வி நிறுவனம்
உருவாக்கம்1989
பணிப்பாளர்ராஜீவா கராந்திகர் (Rajeeva Karandikar)[1]
அமைவிடம்
Plot H1, SIPCOT IT Park, Padur PO, Siruseri 603103, India
, , ,
வளாகம்புறநகர்ப்பகுதி 5.4 ஏக்கர்
இணையதளம்www.cmi.ac.in
முதன்மை வளாகம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Academic Staff Profile". Chennai Mathematical Institute. பார்க்கப்பட்ட நாள் 3 January 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்னை_கணிதவியல்_கழகம்&oldid=2792019" இலிருந்து மீள்விக்கப்பட்டது