சென்னை தமிழ்ப் பாதுகாப்புக் கழகம்

சென்னை தமிழ்ப் பாதுகாப்புக் கழகம் நம் அன்றாட வாழ்வில் உபயோகிப்பதற்காக பல நூல்களை வெளியிட்டது.

வெளியிட்ட நூல்கள்தொகு

தனித்தமிழ் மொழியை நம் அன்றாட வாழ்வில் உபயோகிப்பதற்காக 'தமிழ்ப் பாதுகாப்புக் கழகம், சென்னை' வெளியிட்ட நூல்களுள் சில.

 1. வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம் - வடசொற் கலபின்றிப் பேசவும் எழுதவும் கற்பிப்பது(ஐந்தாம் பதிப்பு 1952) - திருவாட்டி தி. நீலாம்பிகை அம்மையார்
 2. தமிழர் சடங்குகளின் அழைப்பிதழ் எழுதுமுறை - தமிழர் சடங்குகளின் அழைப்பிதல்களைத் தனித்தமிழில் எழுதக் கற்பிப்பது(இரண்டாம் பதிப்பு 1938)
 3. தமிழ்ச் சொற்களைப் பிழைநீக்கி எழுதுமுறை(முப்பத்தி இரண்டாம் பதிப்பு 1989)
 4. மக்கட் பெயர் அகரவரிசை - தமிழ்மக்கள் தனித்தமிழில் தங்கள் பெயர்களை அமைக்கத் துணைபுரிவது(1938)
 5. தமிழ் நாட்டுப் பழமொழி அகரவரிசைச் சுருக்கம் - இடநோக்கிப் பழமொழி அமைத்துப் பொருள் சிறக்கப் பேசவும் எழுதவும் கற்பிப்பது(1956) - திருவாட்டி தி. நீலாம்பிகை அம்மையார்
 6. தமிழ் உவமை அகரவரிசை - இடநோக்கி உவமை அமைத்துப் பொருள் சிறக்கப் பேசவும் எழுதவும் கற்பிப்பது - (மூன்றாம் பதிப்பு 1952)
 7. மரபுத்தொடர் அகரவரிசை(1939)
 8. தமிழ்ப் பாதுகாப்பு நூற்றிரட்டு - நல்ல தமிழில் பேசவும் எழுதவும் கற்பிப்பது(எட்டாம் பதிப்பு 1987)
 9. கட்டுரை நண்பன்
 10. இல்லப் பெயர் அகரவரிசை(இரண்டாம் பதிப்பு 1968) - சென்னை தமிழ்ப் பாதுகாப்புக் கழகம்
 11. உவமை யகரவரிசை(1967)
 12. ஆட்சிச்சொல் அகரவரிசை(ஆறாம் பதிப்பு 1961) - சென்னை தமிழ்ப் பாதுகாப்புக் கழகம்
 13. கபிலர் அகவல் - ஒவ்வொருவரும் ஓடியுனர்தற்குரிய விழுமிய நூல்(195?) - கபிலர்
 14. ஆபுத்திரன் அகவல் - பொழிப்புரையுடன்(194?) - காட்டனார்

வெளி இணைப்புகள்தொகு