சென்னை துரந்தோ
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சென்னை துரந்தோ (Chennai Duronto) என்பது இந்திய இரயில்வேயின் அதிவேகத் தொடருந்து சேவைகளில் ஒன்றாகும். இது சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து டெல்லி ஹஸ்ரத் நிஜாமுதின் ரயில் நிலையத்திற்கு இடையே செல்லும் பயணிகள் தொடருந்து ஆகும்.
திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சென்னையிலிருந்தும் செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் டெல்லியிருந்தும் புறப்படுகிறது. மொத்த பயண தொலைவு 2174 கிலோமீட்டர் ஆகும். சென்னை -டெல்லியிடையே (டெல்லி -சென்னையிடையே) 6 ரயில் நிலையங்களில் நின்று 303 ரயில் நிலையங்களைக் கடந்து செல்லுகிறது. சென்னையிலிருந்து காலை 06:40 க்குக் கிளம்பும் ரயில் மறுநாள் காலை 10:35 ற்கு டெல்லியைச் சென்று அடையும். மொத்த பயண நேரம் 27 மணிகள் 55 நிமிடங்கள். டெல்லியிலிருந்து நண்பகல் 15:50 ற்குக் கிளம்பும் ரயில் வண்டி அடுத்தநாள் இரவு 20:10 ற்குச் சென்னையை வந்தடையும். மொத்தப் பயண நேரம் 28 மணிகள் 20 நிமிடங்கள். சென்னை டெல்லி ரயிலின் எண் 12269. டெல்லி சென்னை ரயிலின் எண் 12270.