சென்னை தேவதாசிகள் ஒழிப்புச் சட்டம்

சென்னை தேவதாசிகள் ஒழிப்புச் சட்டம் என்பது தேவதாசி முறையை ஒழிப்பதற்காக இந்தியா விடுதலையை அடைந்ததை அடுத்து 9 அக்டோபர் 1947 அன்று நிறைவேற்றப்பட்ட சட்டம் ஆகும். இது தமிழ்நாடு தேவதாசிகள் ஒழிப்புச் சட்டம் என்றும் அறியப்படுகிறது.[1] சென்னை மாகாணத்தில் நிறைவேற்றப்பட்ட இச்சட்டம், தேவதாசிகளுக்குத் திருமணம் செய்யும் உரிமையைத் தந்தது. இந்துக் கோயில்களுக்குப் பெண்களை நேர்ந்து விடுவதைச் சட்டத்துக்குப் புறம்பானதாக அறிவித்தது.[2] தேவதாசி ஒழிப்புச் சட்ட முன்வரைவே பிறகு இச்சட்டமாக ஏற்பு பெற்றது.[3]

சென்னை தேவதாசிகள் ஒழிப்புச் சட்டம்
நிலப்பரப்பு எல்லைதென்னிந்தியா
இயற்றியதுசென்னை மாகாணம்
சட்ட வரலாறு
சட்ட முன்வரைவுதேவதாசி ஒழிப்பு சட்ட முன்வரைவு
அறிமுகப்படுத்தியதுமுத்துலட்சுமி ரெட்டி
சுருக்கம்
தேவதாசிகளுக்குத் திருமணம் செய்யும் உரிமையைத் தந்தது. இந்துக் கோயில்களுக்குப் பெண்களை நேர்ந்து விடுவதைச் சட்டத்துக்குப் புறம்பானதாக அறிவித்தது.
முக்கிய சொற்கள்
தேவதாசி, இந்தியாவில் பாலியல் தொழில்

1930 ஆம் ஆண்டு, முத்துலட்சுமி ரெட்டி இந்தச் சட்ட முன்வரைவை சென்னை சட்டமன்ற மேலவையில் முன்மொழிந்தார்.[4] சென்னை மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த தேவதாசிகள் இந்தச் சட்டமுன்வரைவை எதிர்த்தனர். தாங்கள் கற்றறிந்த மேட்டுக்குடி கலைஞர்களே அன்றி பால்வினைத் தொழிலாளர்கள் அல்ல என்று அவர்கள் கருதியதே இந்த எதிர்ப்புக்குக் காரணம் ஆகும்.[5] இச்சட்ட முன்வரைவு ஒப்புதல் பெறுவதில் பெரும் பங்கு வகித்த பெரியார், எதிர்ப்பைக் கருத்திற் கொண்டு, இதனைப் பொதுச் சட்ட முன்வரைவாக அல்லாமல் தனிச்சட்ட முன்வரைவாக நிறைவேற்றுமாறு வழிநடத்தினார்.[6] சென்னை தேவதாசிச் சட்டம் அதற்குப் பிறகு நிறைவேறிய அதே போன்ற சட்டங்களைப் போன்று கடுமையானது இல்லை.[7] இச்சட்டம் தேவதாசிகளைக் குறித்தது மட்டுமே என்பதால், தென்னிந்தியாவில் பால்வினைத் தொழில் தொடர்ந்தது. குறிப்பாக, ஆகஸ்ட் 14, 1956 அன்று சென்னை தேவதாசி எதிர்ப்புச் சட்டம் நிறைவேறும் வரை, ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகளில் தொடர்ந்தது.[8] சென்னை தேவதாசி ஒழிப்புச் சட்டம் என்பது அன்றைய பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களிலும் அதனை அடுத்து விடுதலை பெற்ற இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் ஆட்சிப் பகுதிகளிலும் பால்வினைத் தொழிலைச் சட்டத்துக்குப் புறம்பானது என்று அறிவித்து நிறைவேற்றப்பட்ட எண்ணற்ற சட்டங்களுள் ஒன்று ஆகும். 1934 பாம்பே தேவதாசி பாதுகாப்புச் சட்டம், 1957 தேவதாசி பாதுகாப்பு (நீட்சி) சட்டம், 1988 ஆந்திரப் பிரதேச தேவதாசிச் சட்டம் ஆகியவை இச்சட்டங்களுள் சிலவாகும்.[9]

மேற்கோள்கள்

தொகு
  1. B. S. Chandrababu; L. Thilagavathi (2009). Woman, Her History and Her Struggle for Emancipation. Bharathi Puthakalayam. p. 264. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8189909975.
  2. V. Sithannan (2006). Immoral Traffic: Prostitution in India. JEYWIN Publications. p. 21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8190597507.
  3. Parvathi Menon (2000). Alice Thorner, Maithreyi Krishnaraj. ed. "Ideals, Images and Real Lives: Women in Literature and History". Frontline (Sameeksha Trust) 18 (16). http://www.hindu.com/fline/fl1816/18160740.htm. பார்த்த நாள்: 27 May 2013. 
  4. Ananya Chatterjea (2004). Butting Out: Reading Resistive Choreographies Through Works by Jawole Willa Jo Zollar and Chandralekha. Wesleyan University Press. p. 173. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0819567337.
  5. Moovalur A. Ramamrithammal (2003). K. Srilata. ed. "Lobbying for Devadasi Abolition: From Artiste to Prostitute". The Other Half of the Coconut: Women Writing Self-respect History (Zubaan): 100. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:818670650X. 
  6. Vadivelu Rajalakshmi (1985). The Political Behaviour of Women in Tamil Nadu. Inter-India Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8121000203.
  7. Gurmukh R. Madan (1979). Western Sociologists on Indian Society: Marx, Spencer, Wever, Durkheim, Pareto. Taylor & Francis. p. 351. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0710087829.
  8. Davesh Soneji (2012). Unfinished Gestures: Devadasis, Memory, and Modernity in South India. University of Chicago Press. p. 110. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0226768090.
  9. Promoting Women's Rights As Human Rights. United Nations. 1999. p. 97. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9211200032.