சென்னை பெண்கள் மேனிலைப் பள்ளி, இராட்லர் தெரு
சென்னை பெண்கள் மேனிலைப் பள்ளி, இராட்லர் தெரு சென்னை நகரின் சூளைப் பகுதியில் அமைந்துள்ள மேல்நிலைப் பள்ளி, 24 ஆகஸ்டு 1945ல் வள்ளல் பாலைய்ய நாயுடு அவர்கள் வழங்கிய நிலத்தில், நடுநிலைப்பள்ளியாக தொடங்கப்பட்டது. 19 ஆகஸ்டு 1961ல் உயர்நிலைப்பள்ளியாகவும், 17 ஜூலை 1978ல் மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்ந்து, இன்று சூளைப் பகுதியில் ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த பெண் குழந்தைகளின் கல்விக்கு பெரிதும் பயன்பட்டுவருகின்றது.
நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள்
தொகுஇந்த சென்னைப் பள்ளி, சென்னை மாநகராட்சி, கல்வித் துறையின் நிர்வாகத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. சுமார் 2500 மாணவிகள் பயிலும் இப்பள்ளியில், 85 ஆசிரிய, ஆசிரியைகள் பணியாற்றிவருகின்றனர்.
வகுப்புகள் மற்றும் பாடப்பிரிவுகள்
தொகு- 6 முதல் 10ம் வகுப்பு வரை தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கில வழியில் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்கள் போதிக்கப்படுகிறது.
- 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு கீழ்காணும் பாடப்பிரிவுகளில் வகுப்புகள் நடத்தப்படுகிறது.
பாடப்பிரிவு குறியீட்டு எண் | பாடங்கள் | பயிற்று மொழி |
---|---|---|
102 | இயற்பியல், வேதியியல், கணிப்பொறி அறிவியல், கணிதவியல் | ஆங்கிலம் |
103 | இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதவியல் | தமிழ் மற்றும் ஆங்கிலம் |
204 | இயற்பியல், வேதியியல், உயிரியல், செவிலியர் பயிற்சி | தமிழ் |
207 | இயற்பியல், வேதியியல், உயிரியல், மனையியல் | தமிழ் |
208 | இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் | தமிழ் |
302 | கணிப்பொறி அறிவியல், வணிகவியல், கணக்குப் பதிவியல், பொருளியல் | ஆங்கிலம் |
308 | வணிகவியல், கணக்குப் பதிவியல், பொருளியல், வணிகக் கணிதம் | தமிழ் மற்றும் ஆங்கிலம் |
402 | கணிப்பொறி அறிவியல், வரலாறு, புவியியல், பொருளியல் | தமிழ் மற்றும் தெலுங்கு |
441 | மனையியல், ஆடைவடிவமைத்தல் மற்றும் தயாரித்தல் (தொழிற்கல்வி) | தமிழ் |
442 | மனையியல், ஊட்டச்சத்துணவியல் (தொழிற்கல்வி) | தமிழ் |
- வரையறுக்கப்பட்ட பாடதிட்டத்துடன், இசை, விளையாட்டு போன்ற இணைக் கல்வி பாடங்களும் மாணவிகளுக்கு போதிக்கப்பட்டு வருகின்றது
- நாட்டு நலப் பணித் திட்டம், சாரணியர் இயக்கம், இளம் செஞ்சிலுவை சங்கம் ஆகியவையும் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.
முகவரி
தொகுசென்னை பெண்கள் மேனிலைப் பள்ளி
எண்: 3, இராட்லர் தெரு, சூளை,சென்னை-600112
மண்டலம்: 7 வட்டம்: 102
தமிழ்நாடு, இந்தியா
(டவுட்டன் மணி கூண்டு அருகில்; இந்தியன் ஓவர்சீஸ் வங்கி-புரசைவாக்கம் கிளை அருகில் உள்ள தெரு)
தொலைபேசி எண்: +91-044-26402468
மின் அஞ்சல்: cghssrotler112@gmail.com
அருகாமை இரயில் நிலையம்: சென்னை சென்ட்ரல் மற்றும் சென்னை எழும்பூர்
பேருந்து எண்கள்:
சென்னை கோயம்பேட்டிலிருந்து:59, 59A, 59B, 59D, 159, 159A, 159B
சென்னை பாரிமுனையிலிருந்து:7B, 7C, 7E, 7F, 7G, 7H, 7K, 7L, 7M, 42B, 42D, 64, 64A, 64B, 64C, 64D, 142, 242
இதர இடங்களிலிருந்து: 29, 29A, 29B, 29D, 29L, 37, 37D, 38C, 138C
அருகாமை பேருந்து நிறுத்தம்: டவுட்டன் அல்லது புவனேஷ்வரி
வெளி இணைப்புகள்
தொகு- இணைய தளம் பரணிடப்பட்டது 2013-04-26 at the வந்தவழி இயந்திரம்