சென்னை மதுரை துரந்தோ அதிவேக விரைவுத் தொடருந்து

வண்டி எண் 22205/22206 கொண்ட சென்னை மதுரை துரந்தோ தொடருந்து என்பது, முற்றிலும் குளிரூட்டப்பட்ட இடைநில்லா அதிவேக தொடருந்தாகும். இந்திய இரயில்வே துறையினால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வண்டி, தமிழகத்தின் தலைநகரான சென்னையிலருந்து தென் தமிழகத்தின் முக்கிய மாநகரான மதுரைக்கு இயக்கப்படுகிறது. இடைநில்லா தொடருந்து என்பதால், புறப்படும் இடத்தையும் சேரும் இடத்தையும் தவிர வேறு எங்கும் நிற்காது. தொழில்நுட்ப ரீதியாக சேலத்தில் மட்டும் நின்று செல்லும். இந்தத் தொடருந்து, தென்னக இரயில்வே துறையினால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

சென்னை மதுரை துரந்தோ அதிவேக விரைவுத் தொடருந்து
சென்னை மதுரை துரந்தோ தொடருந்து
கண்ணோட்டம்
வகைதுரந்தோ அதிவேக விரைவு தொடருந்து
நிகழ்நிலைபயன்பாட்டில் உள்ளது
நிகழ்வு இயலிடம்தமிழ்நாடு
நடத்துனர்(கள்)தென்னக இரயில்வே
வழி
தொடக்கம்சென்னை (MAS)
இடைநிறுத்தங்கள்1 தொழில்நுட்ப நிறுத்தம்
முடிவுமதுரை (MDU)
சராசரி பயண நேரம்8 hrs 15 minutes
சேவைகளின் காலஅளவுவாரம் இருமுறை
தொடருந்தின் இலக்கம்22205/22206
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)முதல் வகுப்பு(ஏ.சி.), இரண்டாம் வகுப்பு(ஏ.சி.), மூன்றாம் வகுப்பு(ஏ.சி.)
இருக்கை வசதிஉள்ளது
படுக்கை வசதிஉள்ளது
காணும் வசதிகள்பெரிய சன்னல்கள்
சுமைதாங்கி வசதிகள்உள்ளது
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்புLoco: SA - MAS(WAP 4), RPM loco shed
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்)
மின்சாரமயமாக்கல்ஆம்
வேகம்67கி.மீ

தொடருந்து பெட்டிகளின் தொகுப்பு தொகு

மற்ற துரந்தோ தொடருந்துகளைப் போலவே, இவ்வண்டியும் முற்றிலுமாக குளிரூட்டப்பட்ட பெட்டிகளைக் கொண்டது.

இத்தொடருந்தில்...

  • 1 குளிரூட்டப்பட்ட முதல் வகுப்புப் பெட்டி (1A)
  • 3 குளிரூட்டப்பட்ட இரண்டாம் வகுப்புப் பெட்டி (2A)
  • 9 குளிரூட்டப்பட்ட மூன்றாம் வகுப்புப் பெட்டி (3A)
  • 2 மின்னியற்றி (EOG)

வண்டி எண் 22205 / சென்னை - மதுரை துரந்தோ தொடருந்துs

இணைக்கப்பட்டுள்ள பெட்டிகளின் எண்ணிக்கை: 15

Loco EOG B9 B8 B7 B6 B5 B4 B3 B2 B1 A3 A2 A1 H1 EOG

வண்டி எண் 22206 / மதுரை - சென்னை துரந்தோ தொடருந்து

இணைக்கப்பட்டுள்ள பெட்டிகளின் எண்ணிக்கை: 15

Loco EOG H1 A1 A2 A3 B1 B2 B3 B4 B5 B6 B7 B8 B9 EOG

கால அட்டவணை தொகு

22205 - சென்னை சென்ட்ரலிலிருந்து மதுரைக்கு (திங்கள் & புதன்)[1]

புறப்படுமிடம் நேரம் சேருமிடம் நேரம்
சென்னை சென்ட்ரல் 22.30 மதுரை சந்திப்பு 06.45

22206 - மதுரையிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு (செவ்வாய் & வியாழன்)[2]

புறப்படுமிடம் நேரம் சேருமிடம் நேரம்
மதுரை சந்திப்பு 22.40 சென்னை சென்ட்ரல் 07.10

வழித்தடம் தொகு

 
மதுரை சந்திப்பின் 2வது நடைமேடையில் நிறுத்தப்பட்டிருக்கும் மதுரை - சென்னை துரந்தோ தொடருந்து
  • மேலிருந்து கீழாக: சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் சந்திப்பு - காட்பாடி சந்திப்பு - ஜோலார்பேட்டை சந்திப்பு - சேலம் சந்திப்பு - கரூர் சந்திப்பு - திண்டுக்கல் சந்திப்பு - மதுரை சந்திப்பு.
  • கீழிருந்து மேலாக: மதுரை சந்திப்பு - திண்டுக்கல் சந்திப்பு - கரூர் சந்திப்பு - சேலம் சந்திப்பு - ஜோலார்பேட்டை சந்திப்பு - காட்பாடி சந்திப்பு - அரக்கோணம் சந்திப்பு - சென்னை சென்ட்ரல்.
  • தொழில்நுட்ப நிறுத்தம்: சேலம் சந்திப்பு.
  • பிற நிறுத்தம்: இல்லை.

நோக்கமும் முக்கியத்துவம் தொகு

 
மதுரை சந்திப்பின் 2வது நடைமேடையில் நிறுத்தப்பட்டிருக்கும் மதுரை - சென்னை துரந்தோ தொடருந்து

தமிழகத்தில், பொருளாதார, கலாச்சார மற்றும் சுற்றுலா நடவடிக்கைகளின் அடிப்படையில் முக்கிய மாநகரங்களாக விளங்குவது சென்னை மற்றும் மதுரை. மதுரை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் இருந்து மாநில தலைநகரான சென்னைக்கு வருவேரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொணடே வருகிறது. அப்படி வருவோரில் நான்கில் மூன்று சதவிகிதத்தினர், தொடருந்து போக்குவரத்தையே சார்ந்திருக்கின்றனர். அதனால், இவ்வழித்தடத்தில் மீளமுடியாத போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பாண்டியன், நெல்லை போன்ற அதிவிரைவு தொடருந்துகளில் பயணச்சீட்டு பெறுவதென்பது ஒரு இமாலய சாதனையாகிவிட்டது.

அதன் காரணமாக, இவ்வழித்தடத்தில் புதிதாக தொடருந்துகளை அறிமுகப்படுத்த வேண்டிய சூழலில் தள்ளப்பட்ட இரயில்வே துறை, தென் தமிழகத்தில் முதன் முதலாக முற்றிலும் குளிர்சாதனப் பெட்டியால் ஒருங்கிணைக்கப்பட்ட துரந்தோ அதிவேக விரைவு தொடருந்தை அறிமுகப்படுத்தியது. இவ்வழித்தடத்தில், வழக்கமான தொடருந்துகளை விட, சிறந்த மற்றும் மிகவும் ஆடம்பரமான வண்டி இது ஒன்றே. மற்ற தொடருந்துகளை ஒப்பிடுகையில், இந்த வண்டி, பயணியரின் நேரத்தை மிச்சப்படுத்துகிறது.

காட்சியகம் தொகு

References தொகு

  1. "சென்னை - மதுரை துரந்தோ தொடருந்தின் கால அட்டவணை". இந்திய இரயில்வே துறை. பார்க்கப்பட்ட நாள் 01 July 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "மதுரை - சென்னை துரந்தோ தொடருந்தின் கால அட்டவணை". இந்திய இரயில்வே துறை. பார்க்கப்பட்ட நாள் 01 July 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)