சென்னை மறுகண்டுபிடிப்பு (நூல்)
சென்னை மறுகண்டுபிடிப்பு (Madras Rediscovered) என்பது சென்னை வரலாற்றாசிரியர் சு. முத்தையா எழுதிய சென்னையின் வரலாறு பற்றிய நூலாகும்ப. முதலில் மெட்ராஸ் டிஸ்கவர்ட் என்ற பெயரில், முதல் பதிப்பு 1981 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அப்போதிருந்து, புத்தகமானது நல்ல விற்பனையாகும் நூலாக உருவெடுத்து ஏழு பதிப்புகள் கண்டது. சி. வி. கார்த்திக் நாராயணால் சென்னை மருகண்டுபிப்பிப்பு நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு 2009 இல் வெளியிடப்பட்டது.
சென்னை மறுகண்டுபிடிப்பு | |
---|---|
நூல் பெயர்: | சென்னை மறுகண்டுபிடிப்பு |
ஆசிரியர்(கள்): | எஸ். முத்தையா, சி. வி. கார்த்திக் நாராயணன் (தமிழில்) |
வகை: | வரலாறு |
துறை: | சென்னையின் வரலாறு |
காலம்: | கிபி 16ம் நூ.ஆ. - தற்காலம் |
இடம்: | தமிழ்நாடு |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 640 |
பதிப்பகர்: | கிழக்குப் பதிப்பகம் |
பதிப்பு: | 2009 |
பதிப்புகள்
தொகுமெட்ராஸ் டிஸ்கவர்ட் என்ற முதல் பதிப்பு 1981 இல் ஈஸ்ட்-வெஸ்ட் புக்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இது 160 பக்கங்களுடன், விலை ரூ. 10 ஆக இருந்தது மெட்ராஸ் டிஸ்கவர்ட் இரண்டாவது பதிப்பு, 286 பக்கங்களுடன் விரிவாக்கபட்டதாக 1987 இல் வெளியிடப்பட்டது, பின்னர் மூன்றாவது பதிப்பு 1993 இல் வெளியிடப்பட்டது. 1999 இல் வந்த நான்காவது பதிப்பு மெட்ராஸ் ரீ டிஸ்கவல்ட் என்ற பெயரில் "ஒன்ஸ் அபான் எ சிட்டி" என்ற துணைத் தலைப்போடு வெளியிடப்பட்டது. 2004 இல் வந்த ஐந்தாவது பதிப்பானது ரூ. 360 விலையோடு, 427 பக்கங்கள் கொண்ட விரிவான நூலாக வெளிவந்தது.
திறனாய்வு
தொகுபத்திரிகையாளர் பிஷ்வநாத் கோஷ், முத்தையாவின் மெட்ராஸ் ரீ டிஸ்கவர்ட், "நகர பாரம்பரியத்தின் கடைசி சொல்" என்று கருதுகிறார். அவுட்லுக் டிராவலரின் ஒரு ஆய்வு புத்தகத்தை பின்வருமாறு விவரிக்கிறது. [1]
This collection of writings on Chennai is steeped in history, meticulously researched but somewhat tediously written. The production values are not very high either
தமிழ் மொழிபெயர்ப்பு
தொகுஇந்த நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு இது. சி. வி. கார்த்திக் நாராயணனின் மொழிபெயர்ப்பில் உருவான இந்த நூலைக் கிழக்குப் பதிப்பகம் 2009 ஆம் ஆண்டில் வெளியிட்டது.
உள்ளடக்கம்
தொகுஇந்த நூல் பின்வரும் இருபது அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[2]
- பெயரில் என்ன?
- டேயின் 'ஆள் நடமாட்டம் அற்ற மண்'
- மாநகரத்தின் எல்லை
- கோட்டையில் இருந்து தொடங்குவோம்
- நிழல்பாதை முதல் மவுண்ட் வரை
- தோமா சம்பிரதாயம்
- தெற்கே செல்லும் சாலை
- இரண்டு தீவுகளின் கதை
- பிரமிப்பூட்டும் மரீனா
- தோமாவின் நகரம்
- மயில்களும் அல்லிகளும்
- பிரமஞான சபையின் ஆசிரமம்
- கவரிமானும் கரிய மானும்
- ராஜின் பவனங்கள்
- வடக்கே செல்லும் சாலை
- உள்ளேயிருக்கும் நகரம்
- பூந்த மல்லிக்குச் செல்லும் சாலை
- கூவத்தின் வளைவுகளில்
- பெரிய சத்திரச் சமவெளி
- அழகான நகரம்
இவற்றையும் பார்க்கவும்
தொகு- எஸ். முத்தையா - நூலாசிரியர்.
- மதராசபட்டினம்
குறிப்புகள்
தொகுஉசாத்துணைகள்
தொகு- Elias, Esther (24 August 2014). "Vignettes of a city". The Hindu. http://www.thehindu.com/features/metroplus/madras-rediscovered-by-s-muthiah/article6345194.ece.
- http://www.frontline.in/cover-story/memories-of-madras/article6328325.ece#test
- முத்தையா, எஸ்., கார்த்திக் நாரயணன், சி.பி. (தமிழில்), சென்னை மறுகண்டுபிடிப்பு, கிழக்கு பதிப்பகம், 2009.