சென் தா

சீன அணு இயற்பியலாளர்

சென் தா (Chen Da) சீன நாட்டைச் சேர்ந்த ஓர் அணு இயற்பியலாளராவார். 1937 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 22 ஆம் தேதியன்று சென் தா பிறந்தார். சீன அறிவியல் கல்விக் கழகத்தில் கல்வியாளராகப் பணிபுரிந்தார்.

சென் தா
Chen Da
இயற்பெயர்陈达
பிறப்பு(1937-03-22)22 மார்ச்சு 1937
சீனா, சியாங்சு, நாண்டோங்கு மாகாணம், டோங்சௌ மாவட்டம்.
இறப்பு22 சூலை 2016(2016-07-22) (அகவை 79)
நாஞ்சிங், சியாங்சு, சீனா
துறைஅணு இயற்பியல்
கல்வி கற்ற இடங்கள்சிங்குவா பல்கலைக்கழகம்

வாழ்க்கைக்குறிப்பு தொகு

சென் சிங்குவா பல்கலைக்கழகத்தில் 1963 ஆம் ஆன்டு பொறியியல் இயற்பியலில் பட்டம் பெற்றார். சீன அணுசக்தி திட்டத்திற்கான வடமேற்கு அணு தொழில்நுட்ப நிறுவனத்தில் இவருக்கு வேலை கிடைத்தது. அணுகுண்டு சோதனை மற்றும் ஐதரசன் வெடிகுண்டு சோதனை ஆகிய திட்டங்களில் சென் பங்கேற்றார். [1] சென் சீனாவின் முதல் இராணுவ நிலை யுரேனியம் ஐதரசன் சிர்கோனியம் துடிப்பு அணு உலையை உருவாக்கினார். [2] 1993 ஆம் ஆண்டில் சென்னின் பங்களிப்புக்காக மக்கள் விடுதலை இராணுவத்தால் இவருக்கு தரைப்படை உயர் அலுவலர் பதவி வழங்கப்பட்டது. சீன அறிவியல் கல்விக் கழகத்தின் கல்வியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சென் 2001 ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றார். [3] நாஞ்சிங்கு வானூர்தியியகல் மற்றும் விண்வெளிப் பயணவியல் பல்கலைக்கழகத்தின் அழைப்பை ஏற்றுக்கொண்டு அங்கு ஒரு பேராசிரியராக பணிபுரிந்தார்.[4] சென்னின் ஆராய்ச்சி பகுதி அணு தொழில்நுட்ப பயன்பாட்டு திட்டத்திற்கு திரும்பியது.

சென் 2016 ஆம் ஆண்டு சூலை 22 அன்று 79 வயதில் நாஞ்சிங்கில் இறந்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. "陈达" (in Chinese). Ministry of Industry and Information Technology of China. http://www.miit.gov.cn/n11293472/n11293877/n14774195/n14774227/14777947.html. பார்த்த நாள்: 11 October 2016. 
  2. "著名核科学家、中国科学院陈达院士逝世" (in Chinese). Sina. http://news.sina.com.cn/c/2016-07-23/doc-ifxuifip2820711.shtml. பார்த்த நாள்: 11 October 2016. 
  3. "著名核科学与技术专家 南通籍院士陈达魂归马兰" (in Chinese). zgnt.net இம் மூலத்தில் இருந்து 5 ஜனவரி 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170105015306/http://www.zgnt.net/content/2016-08/13/content_2477164.htm. பார்த்த நாள்: 11 October 2016. 
  4. "著名核科学家陈达院士逝世" (in Chinese). Xinhua Net இம் மூலத்தில் இருந்து 23 ஜூலை 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160723173049/http://www.js.xinhuanet.com/2016-07/22/c_1119266338.htm. பார்த்த நாள்: 11 October 2016. 

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்_தா&oldid=3245958" இலிருந்து மீள்விக்கப்பட்டது