சென் பீட்டர்ஸ்பேர்க் விரைவுப் போக்குவரத்து குண்டு வெடிப்பு 2017

உருசியா நாட்டின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகர சென் பீட்டர்ஸ்பேர்க் விரைவுப் போக்குவரத்து நிலையத்தில் 3 ஏப்ரல் 2017 அன்று குண்டு வெடித்தது. குண்டு வெடிக்கும் போது விரைவுப் போக்குவரத்து தொடர்வண்டியானது சென்னாயா ப்லோஷ்ஜாட் (Sennaya Ploshchad) மற்றும் டெக்னாலஜிஸ்கி இன்ஸ்டிடியூட் (Tekhnologichesky Institut ) ஆகிய நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தது. இவ்விபத்தில் உடனடியாக ஒன்பது பேர் மரணமடைந்தனர் பின்னர் மருத்துவமனையில் ஐவர் மரணமடைந்தனர். மேலும் 45 பேர் காயமடைந்தனர்[6][7][8][3][9]. வெடிபொருளானது கைப்பெட்டியினுள் (briefcase) வைக்கப்பட்டிருந்தது. இரண்டாவது வெடிபொருளானது மற்றுமொரு விரைவுப் போக்குவரத்து நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் செயலிழக்கச் செய்யப்பட்டது[10][11][12] T[9][10]. இக்குண்டுவெடிப்பின் சூத்ரதாரியாக கிர்கிசுத்தான் நாட்டைச் சேர்ந்த ரஷ்யக் குடியுரிமை பெற்ற அக்பர்ஷான் ஜாலியோய் (Akbarzhan Jaliov) சந்தேகிக்கப்படுகிறார்[13].

சென் பீட்டர்ஸ்பேர்க் விரைவுப் போக்குவரத்து குண்டு வெடிப்பு 2017
இடம்சென்னாயா ப்லோஷ்ஜாட் (Sennaya Ploshchad) மற்றும் டெக்னாலஜிஸ்கி இன்ஸ்டிடியூட் (Tekhnologichesky Institut ) ஆகிய நிலையங்களுக்கு இடையே, உருசியா.
ஆள்கூறுகள்59°54′59″N 30°19′07″E / 59.91639°N 30.31861°E / 59.91639; 30.31861`
நாள்ஏப்ரல் 3, 2017 (2017-04-03)
14:40[1] (கிழக்கு ஐரோப்பிய கோடைக்கால நேரம் (UTC +3))
தாக்குதலுக்கு
உள்ளானோர்
பொதுமக்கள்
தாக்குதல்
வகை
தற்கொலைத் தாக்குதல்[2]
ஆயுதம்தற்கொலை வெடிகுண்டு
இறப்பு(கள்)14[3] (+1 தற்கொலையாளி)
காயமடைந்தோர்51[4][5]

தாக்குதல்

தொகு

2017, ஏப்ரல் 3 அன்று கிட்டத்தட்ட ஒரு கிலோகிராம் எடையுடைய வெடிபொருளானது, விரைவுப் போக்குவரத்து தொடர்வண்டி சென்னாயா ப்லோஷ்ஜாட் (Sennaya Ploshchad) மற்றும் டெக்னாலஜிஸ்கி இன்ஸ்டிடியூட் (Tekhnologichesky Institut ) ஆகிய நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருக்கும்போது வெடித்தது[10][14][15]. அவசரகால நிகழ்வுகளின் அமைச்சு, குண்டானது மூன்றாவது பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது எனத் தெரிவித்துள்ளது. நேரில் பார்த்தவர்கள் குண்டானது வாசலின் அருகே வெடித்தது எனவும் வெடித்தவுடன் நடைமேடையெங்கும் புகையால் நிரம்பியது எனவும் தெரிவித்தனர். சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்ட காணொளிகள் பாதிக்கப்பட்டவர்களையும், உலோகக் கதவு வளைந்திருந்ததையும் காட்டியது. இக்குண்டுவெடிப்பைத் தொடர்ந்து சென் பீட்டர்ஸ்பேர்க் நகரின் அனைத்து விரைவுப் போக்குவரத்து தொடர்வண்டி நிலையங்களும் மூடப்பட்டன[10][12]. பின்மாலைப் பொழுதில் இரண்டாவது, மூன்றாவது மற்றும் ஐந்தாவது தடத் தொடர்வண்டிகள் வழக்கம்போல் இயங்கின.[9].

பாதிக்கப்பட்டோர்

தொகு
பாதிக்கப்பட்டோர் நாடுவாரியாக
நாடு மரணமடைந்தோர்
  உருசியா 3
  கசக்கஸ்தான்[16] 1
  அசர்பைஜான்[17] 1
அடையாளம் தெரியாதோர் 9
மொத்தம் 14

எதிர்வினைகள்

தொகு
 
பாதிக்கப்பட்டோருக்கு அஞ்சலி செலுத்தும் விளஜீமிர் விளஜீமிரவிச் பூட்டின்

தாக்குதல் நடந்தபோது அந்கரத்திலிருந்த உருசியப் பிரதமர் விளஜீமிர் விளஜீமிரவிச் பூட்டின் இத்தாக்குதல் தொடர்பான விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார். மேலும் தாக்குதல் நடைபெற்ற இடத்திற்குச் சென்று பாதிக்கப்படவர்களுக்காக மலர் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தாக்குதலாளி

தொகு

தாக்குதலாளி எனச் சந்தேகிக்கப்படும் நபர் கிர்கிசுத்தான் நாட்டைச் சேர்ந்த ரஷ்யக் குடியுரிமை பெற்ற 22 வயதுடைய அக்பர்ஷான் ஜாலியோய் (Akbarzhan Jaliov) ஆவார்[18][19]. 'அக்பர்ஷான் ஜாலியோய் 1995 ஆம் ஆண்டு கிர்கிசுத்தான் நாட்டின் ஓஷ் (Osh) நகரில் பிறந்தவர்[18]. ரஷ்ய நாட்டு எம்.கே (MK) எனும் ஊடகம் இவர் 2015 ஆம் ஆண்டில் சமையல் நிபுணராகப் பணியாற்றினார் எனவும் அதன் பின்னர் தலைமறைவானார் எனத் தெரிவித்தது.

சர்வதேசக் கண்டனங்கள்

தொகு

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்நிகழ்விற்கு தங்களது வருத்தத்தையும் கண்டனத்தையும் தெரிவித்தனர். சைனா,[20] செக் குடியரசுc,[21] டென்மார்க்,[22] பிரன்ஸ்,[23] ஜியார்ஜியா,[24] இந்தியா,[20] இந்தோனேசியா,[25] ஈரான்,[9] இஸ்ரேல்,[26] மலேசியா,[20] பாகிஸ்தான்,[20] போலந்து,[27][28] போர்த்துக்கல்,[29] உக்ரைன்,[30] ஐக்கிய ராஜ்ஜியம், அமெரிக்கா[31] மற்றும் ஐரோப்பிய யூனியன் போன்றவை தங்களது வருத்தத்தைப் பதிவு செய்த நாடுகளுள் சில.[23]

மேற்கோள்கள்

தொகு
  1. "'Мы начали ехать, я увидел взорванный вагон': что писали очевидцы о взрыве в Петербурге" ['We started moving, I saw a blown up train car': what did eyewitnesses write about an explosion in Petersburg]]. TASS. ТАСС информационное агентство. 3 April 2017. பார்க்கப்பட்ட நாள் 3 April 2017.
  2. Denis Pinchuk. "Eleven killed in suspected suicide bombing on Russian metro train". Reuters. http://www.reuters.com/article/us-russia-blast-metro-idUSKBN17519G. 
  3. 3.0 3.1 "В петербургской больнице скончались двое пострадавших при взрыве в метро [Two injured in the explosion in the subway died in the St. Petersburg hospital]" (in ru). ria.ru. https://ria.ru/incidents/20170403/1491389397.html?utm_source=push&utm_medium=browser_notification&utm_campaign=ria.ru. 
  4. http://www.rbc.ru/rbcfreenews/58e30b659a79477e894ba411
  5. "The list of injuries on MChS site". Archived from the original on 2017-04-04. பார்க்கப்பட்ட நாள் 2017-04-04.
  6. https://meduza.io/news/2017/04/04/chislo-zhertv-terakta-v-peterburge-vyroslo-do-14-chelovek?utm_source=website&utm_medium=push&utm_campaign=breaking
  7. "Signs of terror attack in St. Petersburg subway blast obvious — Kremlin". TASS (Saint Petersburg). 4 April 2017. http://tass.com/politics/939175. பார்த்த நாள்: 4 April 2017. "The Russian Investigative Committee has qualified the blast as a terrorist attack, but other versions are looked into." 
  8. MacFarquhar, Neil; Nechepureneko, Ivan. "Explosion in St. Petersburg Metro Kills at Least 10". nytimes.com. The த நியூயார்க் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 3 April 2017.
  9. 9.0 9.1 9.2 9.3 "Взрыв в метро Санкт-Петербурга: погибли 10 человек [Explosion in Metro St. Petersburg, killing 10 people]" (in Russian). BBC Russia. 3 April 2017. http://www.bbc.com/russian/live/news-39478165. பார்த்த நாள்: 3 April 2017. 
  10. 10.0 10.1 10.2 10.3 "St Petersburg metro explosions kill ten - media". BBC. 3 April 2017. பார்க்கப்பட்ட நாள் 3 April 2017.
  11. "At least 10 people may have been killed by Russia metro blast: TASS". Reuters. 3 April 2017. பார்க்கப்பட்ட நாள் 3 April 2017.
  12. 12.0 12.1 "Explosion in St. Petersburg Metro, fatalities confirmed (GRAPHIC IMAGES)". Russia Today. 3 April 2017. பார்க்கப்பட்ட நாள் 3 April 2017.
  13. "St Petersburg metro bombing suspect 'from Kyrgyzstan'". BBC News Online. பார்க்கப்பட்ட நாள் 4 April 2017.
  14. "В Санкт-Петербурге произошел взрыв в метро. Онлайн-трансляция" (in Russian). RBC. http://www.rbc.ru/textonlines/03/04/2017/58e238789a7947f42e875f91. பார்த்த நாள்: 3 April 2017. 
  15. Jansen, Bart (3 April 2017). "Russian subway bombing reveals terror vulnerability". USA Today. https://www.usatoday.com/story/news/2017/04/03/subway-security-st-petersburg-new-york-london-paris-brussels/99988934/. பார்த்த நாள்: 3 April 2017. 
  16. "Названо имя предполагаемого террориста-смертника в Санкт-Петербурге" (in ru). mk.ru. http://www.mk.ru/incident/2017/04/04/predpolagaemyy-terroristsmertnik-opoznan-v-sanktperetburge.html. 
  17. "Azerbaijani woman confirmed dead in St. Petersburg metro blast - UPDATED" (in en). apa.az Mail இம் மூலத்தில் இருந்து 2017-04-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170405170342/http://m.apa.az/en/azerbaijani-news/accidents-incidents-news/azerbaijani-dies-in-terror-act-in-st-petersburg.html. 
  18. 18.0 18.1 Jamieson, Alastair (4 April 2017). "St. Petersburg Subway Bomb Suspect Named as Akbarzhon Jalilov: Reports". NBC News (Moscow: NBCUniversal). http://www.nbcnews.com/news/world/st-petersburg-subway-bomb-suspect-named-akbarzhon-jalilov-reports-n742376. பார்த்த நாள்: 4 April 2017. 
  19. Walker, Shaun (4 April 2017). "St Petersburg metro bombing suspect 'from Kyrgyzstan'". The Guardian (Moscow). https://www.theguardian.com/world/2017/apr/04/st-petersburg-metro-bombing-suspect-kyrgyzstan-akbarzhon-jalilov-says-security-service. பார்த்த நாள்: 4 April 2017. 
  20. 20.0 20.1 20.2 20.3 "Asian leaders extend condolences to Russia over bomb blast". Asian Correspondent. 4 April 2017. Archived from the original on 4 ஏப்ரல் 2017. பார்க்கப்பட்ட நாள் 4 April 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  21. "Prezident republiky zaslal kondolenční telegram ruskému prezidentovi". hrad.cz (in செக்). 3 April 2017. பார்க்கப்பட்ட நாள் 4 April 2017.
  22. "World leaders send their sympathies to St Petersburg bombing victims' families". The Independent. 3 April 2017. Archived from the original on 3 ஏப்ரல் 2017. பார்க்கப்பட்ட நாள் 3 April 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  23. 23.0 23.1 "Bombing on St Petersburg metro leaves at least 9 dead" (in en-GB). The Independent. 3 April 2017. http://www.independent.co.uk/news/world/europe/st-petersburg-metro-explosion-russia-bomb-attack-casualties-blue-line-a7664251.html. 
  24. "PM Kvirikashvili saddened by St. Petersburg metro explosions". agenda.ge. பார்க்கப்பட்ட நாள் 2017-04-03.
  25. "Indonesia Condemns Russia's St. Petersburg Terror Attack" (in en-US). https://en.tempo.co/read/news/2017/04/04/309862422/Indonesia-Condemns-Russias-St-Petersburg-Terror-Attack. 
  26. "Netanyahu says Israel stands with Russia after deadly metro attack". Jerusalem Post. 3 April 2017. http://www.jpost.com/Israel-News/Politics-And-Diplomacy/PM-Netanyahu-extends-condolences-to-Russia-following-deadly-metro-terror-attack-486000. பார்த்த நாள்: 3 April 2017. 
  27. "Sankt Petersburg: eksplozja w metrze. Są zabici i ranni [NA ŻYWO]". Gazeta.PL (in Polish). பார்க்கப்பட்ட நாள் 3 April 2017. {{cite web}}: Unknown parameter |trans_title= ignored (help)CS1 maint: unrecognized language (link)
  28. "Rosja. Wybuch w metrze w Sankt Petersburguc". TVN24.pl (in Polish). பார்க்கப்பட்ட நாள் 3 April 2017. {{cite web}}: Unknown parameter |trans_title= ignored (help)CS1 maint: unrecognized language (link)
  29. https://www.rtp.pt/noticias/mundo/explosao-no-metro-de-sao-petersburgo-provoca-varios-mortos_e992877
  30. "Ukrainian foreign minister condoles with families of people killed in St. Pete". Interfax Ukraine. 3 April 2017. பார்க்கப்பட்ட நாள் 3 April 2017.
  31. "அமெரிக்க அதிபர் கண்டனம்". பார்க்கப்பட்ட நாள் 4 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)