செபதேயுவின் மகன் யாக்கோபு

இயேசு கிறித்துவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவர்

செபதேயுவின் மகன் யாக்கோபு (அரமேய மொழி Yaʕqov, Greek Ιάκωβος, இறப்பு 44 கி.பி) என்பவர் இயேசு கிறித்துவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவர். இவரின் பெற்றோர் செபதேயு மற்றும் சலோமி ஆவர். இவர் திருத்தூதரான புனித யோவானின் சகோதரர். அல்பேயுவின் மகன் யாக்கோபுவிடமிருந்து இவரைப் பிரித்து காட்ட இவர் பெரிய யாக்கோபு (James the Greater) என்றும் அழைக்கப்படுகின்றார்.

செபதேயுவின் மகனான புனித யாக்கோபு
செபதேயுவின் மகனான புனித யாக்கோபு
ஓவியர்: குயிதோ ரெயினி
திருத்தூதர் மற்றும் மறைசாட்சி
பிறப்பு1ம் நூற்றாண்டு
பெத்சாயிதா, கலிலேயா
இறப்பு44 கி.பி
யுதேயா
ஏற்கும் சபை/சமயங்கள்எல்லா கிறித்தவ உட்பிரிவுகளும்
முக்கிய திருத்தலங்கள்சாந்தியாகோ தே கோம்போசுதேலா நகரின் கதீடிரல், கலீசியா
திருவிழா25 ஜூலை (மேற்கு கிறித்தவம்)
30 ஏப்ரல் (கிழக்கு கிறித்தவம்)
30 டிசம்பர் (ஹிஸ்பானிய திருச்சபை)
சித்தரிக்கப்படும் வகைமுத்துச்சிப்பி/சோழி, திருப்பயணியின் தொப்பி மற்றும் உடை
பாதுகாவல்இடங்கள்
கலீசியா, குவாத்தமாலா, நிக்கராகுவா, எசுப்பானியா
தொழில்கள்
கால்நடை மருத்துவர்கள், குதிரையேற்றம், விலங்கின் மென்மயிரால் பொருட்களைச் செய்து விற்பவர்கள், தோல் பதப்படுத்துபவர்கள், மருந்தக பணியாளர்

புதிய ஏற்பாட்டில்

தொகு

யாக்கோபு இயேசுவின் முதல் சீடர்களுல் ஒருவராக விவரிக்கப்படுகிறார். ஒத்தமை நற்செய்தி நூல்களின் படி இவரும் இவரின் சகோதரரான யோவானும் இயேசுவிடமிருந்து அழைப்பு பெறும் போது தங்களின் தந்தையோடு கடர்கறையில் இருந்தனர்.Matt. 4:21-22Mk. 1:19-20 இயேசுவின் தோற்றம் மாறியதை (Transfiguration) கண்ட மூன்று அப்போஸ்தலர்களுல் இவரும் ஒருவராவார்.[1] சமாரியர்கள் இயேசுவை ஏற்றுக் கொள்ளாததால் யாக்கோபும் யோவானும் இயேசுவிடம், ' ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா? ' என்று கேட்டார்கள். அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்து கொண்டார்.Lk 9:51-6 திருத்தூதர் பணிகள் 12:2 இன் படி ஏரோது அரசன், யாக்கோபை தன் வாளால் கொன்றான். திருத்தூதர்களுல் புதிய ஏற்பாட்டில் இவரின் இறப்பு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே பாரம்பரிய நம்பிக்கையின் படி 12 திருத்தூதர்களில் இவரே முதல் இரத்த சாட்சி என நம்பப்படுகிறது.Acts 12:1-2

பக்தி முயற்சிகள்

தொகு

இவர் எசுப்பானியா நாட்டின் பாதுகாவலராக கருதப்படுகின்றார். இவரின் கல்லறை கலீசியாவில் உள்ள சாந்தியாகோ தே கோம்போசுதேலா கத்தீடிரலில் உள்ளதாக நம்பப்படுகின்றது. பரம்பரியமாக இவரின் கல்லறைக்கு செல்லும் பக்தி முயர்ச்சி புனித யாக்கோபுவின் பாதை என அழைக்கப்படுகின்றது. இப்பக்தி -முயற்சி நடுக் காலம் முதல் பல இடங்களில் இருப்பவர்களிடம் பரவியது.

இவரின் விழா நாள் 25 ஜூலை அன்று கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்கம், லூதரனியம் மற்றும் சில சீர்திருத்தத் திருச்சபைகளில் கொண்டாடப்படுகின்றது. மரபுவழி திருச்சபைகளில் 30 ஏப்ரலில் கொண்டாடப்படுகின்றது.

எசுப்பானியாவில்

தொகு
 
புனித யாக்கோபுவின் சிலுவை

பாரம்பரியப்படி சனவரி 2, 40 (கி.பி) இவருக்கு ஐபீரிய மூவலந்தீவு பகுதியில் மறைபணியாற்றிக்கொண்டிருக்கும் போது மரியாளின் காட்சி கிடைத்ததாகவும் அதன் பின்னரே இவர் எருசலேமுக்கு சென்று உயிர் துறந்ததாகவும் நம்பப்படுகின்றது.[2][3] மேலும் இதன் பின் இவரின் உடல் சாந்தியாகோ தே கோம்போசுதேலா ஆலயம் அமைந்துள்ள கலீசியா கடற்கறைக்கு தேவதூதர்களால் கொண்டு வரப்பட்டதாகவும், அங்கிருந்தவர்கள் இவரின் உடலை அடக்கம் செய்ததாகவும் நம்பப்படுகின்றது. எனினும் இவரின் சீடர்களாலேயே இவரின் உடல் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகின்றனர்.

இராணுவ ஒழுங்கு

தொகு

மூர் இணத்தவர்களை வெல்ல துவங்கப்பட்ட பிரிவான கபலேரோஸ் சான்டியாகுஸ்தாஸ் பின்நாட்களில் ஒரு பெரும் மதிப்பிற்குறிய பிரிவாக விளங்கியது, டியேகோ வெலாஸ்க்குவெஸ் போன்றோர் இப்பிரிவின் சின்னமான புனித யாக்கோபுவின் சிலுவையை தங்களின் உடையில் பொறிக்கும் மரியாதையினைப்பெற ஆவலாயிருந்தனர்.

காங்கோ

தொகு

புனித யாக்கோபுவிற்கு நடு ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ பேரரசில் சிறப்பு பக்தி முயர்ச்சிகள் உள்ளது. 1483ஆம் ஆண்டு போர்த்துகீசியர் இங்கு வந்து இறங்கிய போது, இவரின் பக்தி முயர்ச்சிகளை கொண்டு வந்தனர். இந்நாட்டின் பேரரசம் முதலாம் அல்போன்சோ இவரால் தனக்கு போரில் வெற்றி கிடைத்தது என்று கூறி இவரின் விழாநாளை தேசிய விடுமுறை நாள் ஆக்கினான். காலப்போக்கில் புனித யாக்கோபுவின் நாள் காங்கோ பேரரசில் தேசிய விடுமுறை நாள் வழக்கமாகிப் போனது.. அன்று வரிகளை அன்று சேகரிக்கப்பட்டன. இராணுவ பணிக்கு தகுதி உள்ள ஆண்கள் ஆயுதமேந்தி தோன்ற பணிக்கப்பட்டனர். பொதுவாக வட்டார கொண்டாட்டங்களும், தலைநகரில் பெருவிழாவும் கொண்டாடப்பட்டன. பின் நாட்களில் இங்கிருந்த அடிமைகள் புதிய உலகிற்கு கொண்டு செல்லப்பட்டபோது இக்கொண்டாட்டங்களை உடன் எடுத்துச்சென்றனர். இந்நாள் அளவும் ஹெய்டி மற்றும் போர்த்தோ ரிக்கோவில் இவ்விழா கொண்டாடப்படுகின்றது.

இசுலாம்

தொகு

திருக்குரானுக்கு உரை எழுதிய பலர் இவரை இயேசுவின் சீடரெனக்கொள்கின்றனர். அவர்கள் இவரை يعقوب என அழைக்கின்றனர்.[4]

மொர்மனியம்

தொகு

மொர்மனிய கொள்கயை உடையவர்கள் இவர் பேதுருவுடனும் யோவானுடனும் 1829-ஆம் ஆண்டு உயிர்பெற்று வந்து இக்கொள்கயின் பரப்புணரான ஜோசப் ஸ்மித்தை குருவாக திருநிலைப்படுத்தி அப்போஸ்தலிக்க வழிமரபை தொடரச்செய்ததாக நம்புகின்றனர்.[5]


ஆதாரங்கள்

தொகு
  1. Matthew 17:1-9, Mark 9:2-8, Luke 9:28-36.
  2. Chadwick, Henry (1976), Priscillian of Avila, Oxford University Press
  3. Fletcher, Richard A. (1984), Saint James's Catapult : The Life and Times of Diego Gelmírez of Santiago de Compostela, Oxford University Press
  4. Historical Dictionary of Prophets In Islam And Judaism, Brandon M. Wheeler, Disciples of Christ: "Muslim exegesis identifies the disciples as Peter, Andrew, Matthew, Thomas, Philip, John, James, Bartholomew, and Simon"
  5. Doctrine and Covenants 27:12.

வெளி இணைப்புகள்

தொகு