செபாங்கர் தீவு

மலேசியாவின் சபா மாநிலத்தில் உள்ளது.

செபாங்கர் தீவு (ஆங்கிலம்: Sepanggar Island) என்பது மலேசியா, சபா மாநிலத்தில் இருக்கும் செபாங்கர் துணை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தீவு ஆகும்.

செபாங்கர் தீவு
Sepanggar Island
செபாங்கர் தீவின் வான் வழித் தோற்றம்
செபாங்கர் தீவு Sepanggar Island is located in மலேசியா
செபாங்கர் தீவு Sepanggar Island
செபாங்கர் தீவு
Sepanggar Island
புவியியல்
ஆள்கூறுகள்6°4′4″N 116°4′26″E / 6.06778°N 116.07389°E / 6.06778; 116.07389
நிர்வாகம்

இந்தத் தீவின் கிழக்குக் கரையில் ஒரு சிறிய சமூகத்தினர் வாழ்கின்றனர். நகர மையத்தில் இருந்தும் இலிகாசு விரிகுடாவிலிருந்தும் செபாங்கர் தீவை எளிதாகக் காணலாம். தீவு வடகிழக்கு-தென்மேற்கு நோக்குநிலையைக் கொண்டுள்ளதால் கிழக்குக் கரையோரத்தில் கயா விரிகுடாவின் காட்சியைக் காணலாம். அடர்த்தியான வெப்பமண்டல மழைக் காடுகளால் மூடப்பட்டுள்ள இரண்டு முக்கிய சிகரங்கள் செபாங்கர் தீவில் உள்ளன.

நகர மையத்திற்கு அருகிலுள்ள இயெட்டி வழியாகவும் அல்லது கடற்படை தளத்திற்கு அருகிலுள்ள செபாங்கர் விரிகுடாவில் இருந்தும் தீவை அணுகலாம். இருப்பினும், இந்த தீவு உண்மையில் சுற்றுலாப் பயணிகளால் பார்வையிடப்படுவதில்லை.

பெரும்பாலும் மீனவர்கள் இங்கு தங்கி இருக்கிறார்கள். இரண்டாம் உலகப் போரின் பல குண்டுகள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டதாக அறியப்படுகிறது.[1][2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Sepangar Island". WikiMapia. பார்க்கப்பட்ட நாள் 21 March 2012.
  2. "Sepangar Island". World Flicks. Archived from the original on 10 மே 2012. பார்க்கப்பட்ட நாள் 21 March 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செபாங்கர்_தீவு&oldid=3442130" இலிருந்து மீள்விக்கப்பட்டது