செப்புத் திருமேனிகள்

கோயில்களில் இடம் பெறும் சிற்பங்களில் செப்புத் திருமேனிகள் தனிச்சிறப்பு மிக்கவை. ஏனெனில் பிற சிற்பங்கள் கல்லில் செதுக்கப்படும் அல்லது சுதையில் உருவாக்கப்படும். ஆனால் செப்புத் திருமேனிகளோ ஐம்பொன்னில் பார்க்கப்படுகின்றன. ஐம்பொன்னில் செம்பு அதிக அளவில் இடம் பெறுவதால் இவை செப்புத் திருமேனிகள் என்றழைக்கப்படுகின்றன.

செப்புத் திருமேனி உருவங்கள் தொகு

தொடக்கக் காலத்தில் இறைவனது உருவங்கள் மட்டும் வார்க்கப்பட்டதால் அவை திருமேனிகள் என்றழைக்கப்பட்டன. பின்னர் நாளடைவில் ஆழ்வார்கள், நாயன்மார்கள் மற்றும் அரசர்கள் என இறைவனல்லாத உருவங்களும் வார்க்கப்பட்டன.

இறை வழிபாட்டில் செப்புத் திருமேனிகள் தொகு

இறை வழிபாட்டில் செப்புத்திருமேனிகள் பல்லவர், சோழர் காலத்தில் ஐம்பொன்னாலான வார்ப்புத் திருமேனிகள் பல்வேறு கோயில்களில் பயன்படுத்தப்பட்டு உற்சவராகப் பயன்படுத்தப்பட்டு வருவதை இன்றும் தமிழகக் கோயில்களில் காணலாம். தஞ்சை பெரிய கோயிலில் காணும் கல்வெட்டுக்களில் குறிக்கப்படும் செப்புத்திருமேனிகள் உலகப் புகழ்பெற்றவையாகும். ராஜராஜன் பல சிறந்த தெய்வ உருவங்களை செம்பில் வடித்தருளியுள்ளான். சோழ மன்னர்களின் ஆட்சிக்காலம் செப்புத்திருமேனிகளின் பொற்காலம் எனலாம். [1]

செப்புத் திருமேனி உருவான காரணம் தொகு

இறைவன் குடியிருக்கும் கோயிலுக்கு தினமும் சென்று வழிபடும் மனிதர்களை அவர்கள் குடியிருக்கும் இடம் தேடி இறைவனே வந்து அருள் புரிதல் என்பதற்காகவும், அரசன் எவ்வாறு நகர்வலம் வருகின்றாரோ அது போல உயிர்களைக் காக்கும் இறைவனும் மக்களைக் காக்கும் பொருட்டு திருவீதிஉலா வர வேண்டும் என்பதுவும் செப்புத் திருமேனிகள் உருவானதற்கான அடிப்படைக் காரணமாகும்.

கோயில் கருவறையில் உள்ள இறைவனது உருவமானது (மூலவர்) கும்பாபிசேகத்தின் போது மந்திரங்கள் கூறி பிரதிஷ்டை செய்யப்படுவதால் அப்பொழுது முதல் அந்த இறையுருவத்திற்கு இறைத்தன்மை வந்து விடுவதாக நம்பப்படுகிறது. அவ்வாறு இறைத்தன்மை கொண்ட் இறையுருவை அசைத்தாலோ அல்லது வெளியில் எடுத்தாலோ அவ்விறையுருவிலுள்ள இறைத்தன்மை மறைந்துவிடும் என்பதால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இறையுருவை வெளியில் எடுப்பதில்லை. இத்தகைய சூழலில் இறைவன் திருவீதி உலா வரவேண்டும் எனில் அதற்கு இறைவனின் வேறு உருவம் தேவைப்பட்டது. இதன் காரணமாகவே செப்புத் திருமேனிகள், கருவறையிலுள்ள மூலவரது உருவம் எத்தகைய் சிற்பவமைதியுடன் படைக்கப்பட்டதோ அதே சிற்பவமைதியுடன் படைக்கப்பட்டன.

ஆதாரம் தொகு

  • டாக்டர் அம்பை மணிவண்ணன் எழுதிய “ கோயில் ஆய்வும் நெறிமுறைகளும்” நூல் பக்கம் 174.


இவற்றையும் பார்க்கவும் தொகு

  1. செப்புத்திருமேனிகள், தஞ்சைப்பெரிய கோயில் எடுப்பித்த ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா சிறப்பு மலர் 2010, தொடக்கக்கல்வித்துறை, தஞ்சாவூர் மாவட்டம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=செப்புத்_திருமேனிகள்&oldid=3621746" இலிருந்து மீள்விக்கப்பட்டது