நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகள்
நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகள் 1920களிலும், 1930களிலும் நாகப்பட்டினத்தில் கண்டுபிடிக்கப்பட்டவை ஆகும்.
இடம்
தொகுநாகப்பட்டினத்தில் பழங்காலத்தில் புத்த விகாரம் இருந்த இடமான தற்போதைய வெளிப்பாளையம் மற்றும் நாணயக்காரன் தெரு ஆகிய இடங்களிலிருந்து புத்தர் செப்புத்திருமேனிகள் கண்டுபிடிக்கப்பட்டன. [1]
காலம்
தொகு1856இலிருந்து தொடங்கி 1920களிலும், 1930களிலும் 350க்கும் மேற்பட்ட புத்தர் செப்புத்திருமேனிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் சில முற்காலச் சோழர் காலத்தையும் (கி.பி.871-1070), மீதமுள்ளவை பிற்காலச் சோழர் காலத்தையும் சார்ந்தவையாகும். [1]
அருங்காட்சியகங்கள்
தொகுஇவை இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் சென்னையிலுள்ள எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் இவை அதிக எண்ணிக்கையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.[2] தமிழகத்தில் பௌத்தம் பரவியிருந்ததை உணர்த்தும் சான்றுகளாக இவை அமைந்துள்ளன.
2015
தொகுநாகப்பட்டினத்தில் வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டப்பட்டபோது சில புத்தர் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனி அமைப்பை ஒத்திருந்தன. [3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 T.N.Ramachandran, The Nagapattinam and other Buddhist Bronzes in the Madras Museum, Director of Museums, Madras, 1992
- ↑ Buddhist Bronzes, Government Museum, Chennai
- ↑ வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டியபோது 10 புத்தர் சிலைகள் கண்டெடுப்பு, தினகரன், 6.5.2015