செமிட்டிய மக்கள்
செமிட்டிய மக்கள் (Semitic people) என்னும் தொடர் செமிட்டிய மொழிகளில் ஒன்றைப் பேசிய அல்லது பேசுகின்ற இன, பண்பாட்டுக்கு குழுவைச் சேர்ந்த மக்களைக் குறிக்கும்.[1][2][3][4] 1770 ஆம் ஆண்டில் கொட்டின்சென் வரலாற்றுப் பள்ளி உறுப்பினர்களால் முதலில் பயன்படுத்தப்பட்ட இச்சொல், ஆதியாகமத்தில் உள்ள நோவாவின் மூன்று மகன்களில் ஒருவனான "செம்" என்பவனின் பெயரைத் தழுவி உருவானது.[5] இச்சொல், இப்போது மொழியியலாளர்களின் வட்டத்துக்கு வெளியே பெரிதும் பயன்படுவதில்லை.[6][7][8] ஆனாலும், தொல்லியலில் இச்சொல், "பண்டைய செமிட்டிய மொழி பேசும் மக்கள்" என்பதன் ஒருவகைச் சுருக்கமாகப் பயன்படுகின்றது.[8]
இனத்துவமும் இனமும்
தொகுகார்லெட்டன் எசு. கூனின் இனம் சார்ந்த வகைப்பாட்டில், செமிட்டிய மக்கள் காக்கேசிய இனத்தின் உறுப்பினர்களாகக் கருதப்படுகின்றனர். இவர்கள் இந்தப் பகுதியில் உள்ள இந்திய-ஐரோப்பிய, வடமேற்குக் காக்கேசிய, கார்த்தெவெலிய மொழிகளைப் பேசும் மக்களிடம் இருந்து தோற்றத்தில் வேறுபட்டவர்கள் அல்ல. மொழி சார்ந்த ஆய்வுகள் பண்பாட்டு ஆய்வுகளுடன் நெருக்கமாகப் பின்னப்பட்டிருப்பதால், இச்சொல் மதம், செமிட்டிய மொழி பேசும் இனத்துவம் ஆகியவற்றுடன், நெருங்கிய புவியியல், மொழிப் பரம்பலால் தொடர்புகொண்டுள்ள வேறுபட்ட பண்பாடுகளின் வரலாற்றையும் விளக்கும் ஒன்றாக ஆகியுள்ளது.[9]
சில மரபியல் ஆய்வுகள் (செமிட்டிய மொழிகளைப் பேசும் மக்களின் டி.என்.ஏயின் பகுப்பாய்வு மூலம்) இவர்களிடையே ஒரு பொதுக் குல மரபு இருப்பதைக் கண்டறிந்துள்ளன. குறிப்பிடத்தக்க பொது ஊன்குருத்து முடிவுகள் எதுவும் கண்டறியப்படாவிட்டாலும், மத்திய கிழக்கைச் சேர்ந்த செமிட்டிய மொழி பேசும் மக்களான அரேபியர், யூதர், மண்டாயீன்கள், சமரித்தான்களசிரியர்/ சிரியாக்குகள் என்பவர்களிடையே Y-நிறமூர்த்த இணைப்புக்கள் காணப்பட்டுள்ளன. யூதர்களினதும், பெதூன்களும் உள்ளிட்ட பாலத்தீன அரேபியர்களதும் ஒரு டி.என்.ஏ ஆய்வு இவர்கள் அயல் அரேபியர்களைவிட ஒருவருக்கு ஒருவர் நெருக்கமானவர்கள் என்பதைக் காட்டுகின்றது.[10][11]
செமிட் எதிர்ப்பும், செமிட்மயமாக்கமும்
தொகு"செமிட் எதிர்ப்பு", "செமிட் எதிர்ப்பியம்" ஆகிய சொற்கள் ஒரு குறுகிய பொருளில், செமிட்டிய மக்களில் ஒரு பிரிவினரான யூதர்கள் மீது பகையுணர்வு அல்லது பாகுபாடு காட்டுவதைக் குறிக்கிறது.[12]
ஏர்னெசுட் ரெனான் போன்ற, 19 ஆம் நூற்றாண்டின் மானிடவியலாளர்கள், இன இயல்புகளை வரையறுப்பதற்குக் கதைகள், அறிவியல், நாட்டுப்புறக் கலை போன்றவற்றைப் பயன்படுத்தி, மொழியியல் குழுக்களை இனத்துவம், பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் ஒழுங்குபடுத்தினர். பண்டைய நாகரீகங்களான மெசொப்பொத்தேமியா, இசுரேல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொள்ளும் ரெனான், செமிட்டிய மக்களின் ஓரிறைக் கொள்கையினால், அவர்கள் ஆரிய இனத்தைவிடத் தாழ்ந்தவர்கள் எனக் குறிப்பிட்டார். அவர்களுடைய கொள்கை யூதரின் சிற்றின்ப இச்சை, வன்முறை, தீவினைக்கு அஞ்சாமை, சுயநலம் ஆகிய இயல்புகளிலி இருந்து உருவானது என அவர் கூறினார். இவ்வாறான யூதருக்கு எதிரான ரெனானின் முற்சார்பு நிலைப்பாட்டை இசுட்டெயின்செனீதர் (Steinschneider) என்பவர் "செமிட்டிய எதிர்ப்பு மனச்சாய்வு" என்றார்.[13]
1879 இல், செமானியப் பத்திரிகையாளர் வில்லியம் மார் என்பவர், யூதாயிசத்தின் மீதான செருமனிசிசத்தின் வெற்றிக்கான வழி என்னும் துண்டுப் பிரசுரத்தில் செருமானியர்களுக்கும் யூதர்களுக்கும் இடையிலான போராட்டம் என்பது பற்றிப் பேசி இச்சொல்லின் அரசியல்மயப்படுத்தலைத் தொடங்கி வைத்தார். அவர் யூதர்களைத் தாராண்மைவாதிகள் என்றும், வேர் அற்றவர்கள் என்றும் அவர்கள் செருமானியர்களை மீட்க முடியாத அளவுக்கு யூதமயப் படுத்துவதாகவும் குற்றஞ்சாட்டினார். 1879 இல் மாரைப் பின்பற்றுபவர்கள் யூத எதிர்ப்பு அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக "செமிட்டிய எதிர்ப்புக் குழு"[14] வை நிறுவினர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Liverani1995, ப. 392: "A more critical look at this complex of problems should advise employing today the term and the concept "Semites" exclusively in its linguistic sense, and, on the other hand, tracing back every cultural fact to its concrete historical environment. The use of the term "Semitic" in culture, subject as it is to arbitrary simplifications, shows methodological risks which exceed by far the possibility of positive historical analysis. In any case the Semitic character of every cultural fact is a problem which in each situation must be ascenained in its limits and in its historical setting (both in time and in the social environment), and may not be assumed as obvious or traced back to a presumed "Proto-Semitic" culture, statically conceived."
- ↑ On the use of the terms “(anti-)Semitic” and “(anti-) Zionist” in modern Middle Eastern discourse, Orientalia Suecana LXI Suppl. (2012) by Lutz Eberhard Edzard பரணிடப்பட்டது 2017-10-11 at the வந்தவழி இயந்திரம்: "In linguistics context, the term "Semitic" is generally speaking non-controversial... As an ethnic term, "Semitic" should best be avoided these days, in spite of ongoing genetic research (which also is supported by the Israeli scholarly community itself) that tries to scientifically underpin such a concept."
- ↑ Review of "The Canaanites" (1964) by Marvin Pope: "The term "Semitic," coined by Schlozer in 1781, should be strictly limited to linguistic matters since this is the only area in which a degree of objectivity is attainable. The Semitic languages comprise a fairly distinct linguistic family, a fact appreciated long before the relationship of the Indo-European languages was recognized. The ethnography and ethnology of the various peoples who spoke or still speak Semitic languages or dialects is a much more mixed and confused matter and one over which we have little scientific control."
- ↑ Glöckner, Olaf; Fireberg, Haim (25 September 2015). Being Jewish in 21st-Century Germany. De Gruyter. p. 200. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-035015-9.
...there is no Semitic ethnicity, only Semitic languages
- ↑ Baasten, Martin (2003). "A Note on the History of 'Semitic'". Hamlet on a Hill: Semitic and Greek Studies Presented to Professor T. Muraoka on the Occasion of His Sixty-fifth Birthday. Peeters Publishers. p. 57–73. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789042912151.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - ↑ Anidjar 2008, ப. (Foreword): "This collection of essays explores the now mostly extinct notion of Semites. Invented in the nineteenth century and essential to the making of modern conceptions of religion and race, the strange unity of Jew and Arab under one term, Semite (the opposing term was Aryan), and the circumstances that brought about its disappearance constitute the subject of this volume."
- ↑ Anidjar 2008, ப. 6: "To a large extent, or rather, to a quite complete extent, Semites were, like their ever so distant relatives – the Aryans – a concrete figment of the Western imagination, the peculiar imagination that concerns me in the chapters that follow. And just as the witches (the simultaneous efficacy and deep unreliability of "spectral evidence"), Semites were – I write in the past tense because Semites are a thing of the past, ephemeral beings long vanished as such – Semites were, then, something of a hypothesis (Chapter 1), contemporary with, and constitutive of, that other powerfully incarnate fiction named "secularism" (Chapter 2). Again, and as underscored by Edward Said, who raIsed anew the "Semitic question", the role of the imagination can hardly be downplayed."
- ↑ இங்கு மேலே தாவவும்: 8.0 8.1 Lewis, Bernard (1987). Semites and Anti-Semites: An Inquiry into Conflict and Prejudice. W W Norton & Co Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0393304205.
The confusion between race and language goes back a long way, and was compounded by the rapidly changing content of the word "race" in European and later in American usage. Serious scholars have pointed out–repeatedly and ineffectually-‑that "Semitic" is a linguistic and cultural classification, denoting certain languages and in some contexts the literatures and civilizations expressed in those languages. As a kind of shorthand, it was sometimes retained to designate the speakers of those languages. At one time it might thus have had a connotation of race, when that word itself was used to designate national and cultural entities. It has nothing whatever to do with race in the anthropological sense that is now common usage. A glance at the present‑day speakers of Arabic, from Khartoum to Aleppo and from Mauritania to Mosul, or even of Hebrew speakers in the modern state of Israel, will suffice to show the enormous diversity of racial types.
- ↑ "Semite". Merriam-Webster's Collegiate® Dictionary, Eleventh Edition.
- ↑ Nebel, Almut; Filon, Dvora; Brinkmann, Bernd; Majumder, Partha P.; Faerman, Marina; Oppenheim, Ariella (2001). "The Y Chromosome Pool of Jews as Part of the Genetic Landscape of the Middle East". American Journal of Human Genetics 69 (5): 1095–1112. doi:10.1086/324070. பப்மெட்:11573163.
- ↑ Alshamali, Farida; Pereira, Luísa; Budowle, Bruce; Poloni, Estella S.; Currat, Mathias (2009). "Local Population Structure in Arabian Peninsula Revealed by Y-STR Diversity". Hum Hered 68: 45–54. doi:10.1159/000210448. பப்மெட்:19339785. http://content.karger.com/produktedb/produkte.asp?typ=fulltext&file=000210448.
- ↑ "Anti-Semitism". Merriam-Webster's Collegiate® Dictionary, Eleventh Edition.
- ↑ Alex Bein, The Jewish Question: Biography of a World Problem, Fairleigh Dickinson University Press, 1990, p. 594, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8386-3252-1 – quoting the Hebrew Encyclopaedia Ozar Ysrael, (edited Jehuda Eisenstadt, London 1924, 2: 130ff)
- ↑ Moshe Zimmermann, Wilhelm Marr: The Patriarch of Anti-Semitism, Oxford University Press, USA, 1987