செம்பங்குடி ருத்ரகோடீசுவரர் கோயில்
செம்பங்குடி ருத்ரகோடீசுவரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]
அமைவிடம்
தொகுசீர்காழி பழைய பேருந்து நிலையத்திலிருந்து திருமுல்லைவாசல் சாலையில் 1 கிமீ தொலைவில் உள்ளது.
இறைவன்,இறைவி
தொகுஇக்கோயிலில் உள்ள இறைவன் ருத்ரகோடீசுவரர் ஆவார். இறைவி திரிபுரசுந்தரி ஆவார். [1]
பிற சன்னதிகள்
தொகுகோயில் வெட்ட வெளியில் உள்ளது. திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், இறைவி சன்னதிகள் உள்ளன. [1]
அருகிலுள்ள கோயில்
தொகுஅருகில் நாகநாத சுவாமி கோயில் உள்ளது. அங்குள்ள இறைவன் நாகநாதர், இறைவி கற்பூரவல்லி. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோர் உள்ளனர்.