செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் உவமை

செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் இயேசு தனது போதனைகளின் போது கூறிய உவமான கதையாகும். இதில் உலகின் கடைசி நாள் பற்றி இயேசு கூறுகின்றார். இது சிறிய உவமையாக இருந்தாலும் ஒரு நீண்ட பின்னுரையை இயேசு கூறுகின்றார். இது மத்தேயு 25:31-46 இல் காணப்படுகிறது.

நான் பசியாயிருந்தேன்……

உவமை தொகு

ஓர் ஆயர் தமது மந்தையில் செம்றியாடுகளும் வெள்ளாடுகளும் கலந்து போயிருப்பதைக் கண்டு. மாலைவேளயில் மந்தையை தன்முன் கூட்டி செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்தினார்.

பொருள் தொகு

செம்மறியாடுகள் நீதிமான்களாவார்கள் வெள்ளாடுகள் பாவிகளாவர்கள். ஆயர் ஆடுகளை பிரித்தது போல ,உலக முடிவில் இயேசு திரும்ப வந்து நீதிமான்களை தீயவரிடமிருந்து பிரிப்பார் எனபது இதன் பொருளாகும். வலை உவமையுடன் ஒத்த பொருளைக் கொண்டுள்ளது. தெளிவான பொருள் பின்னுரையில் காண்க.

பின்னுரை தொகு

உவமையோடு தொடர்ந்து இயேசு உலக முடிவில் நடக்கப்போகும் நிகழ்வுகளை கூறுகின்றார். இதனை பின்வருமாறு சுருக்கலாம்.

பின்பு இயேசு தம் வலப்பக்கத்தில் (நீதிமான்கள்) உள்ளோரைப் பார்த்து," என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, நீங்கள் என்னோடு வாருங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள் தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள் அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள் . நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள் நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள் சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்" என்பார். அதற்கு நேர்மையாளர்கள்"ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்? எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக் கொண்டோ ம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்? எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத்தேடி வந்தோம்?" என்று கேட்பார்கள். அதற்கு இயேசு,"மிகச் எழியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்" எனப் பதிலளிப்பார்.

பின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து,"சபிக்கப் பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை. நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை" என்பார்.

அதற்கு அவர்கள்,"ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்?" எனக் கேட்பார்கள். அப்பொழுது அவர்,"மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" எனப் பதிலளிப்பார். இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலை வாழ்வு பெறவும் செல்வார்கள்.

இவற்றையும் பார்க்கவும் தொகு

உசாத்துணை தொகு

வெளியிணைப்பு தொகு

தமிழ் கிறிஸ்தவ சபை பரணிடப்பட்டது 2007-02-12 at the வந்தவழி இயந்திரம்