செயங்கொண்டார்

கலிங்கத்துப்பரணி ஆசிரியர்

செயங்கொண்டார் என்னும் புலவர் பிற்கால சோழர் கால இலக்கியமான கலிங்கத்துப்பரணியைப் பாடியவர். முதலாம் குலோத்துங்கனுடைய அவைக்களப் புலவராக இருந்தவர். இவர் தீபங்குடியைச் சார்ந்தவராதலின் அருகர் என்பர். இந்நூலின் கப்புச் செய்யுளால் இவர் சைவர் என அறியலாம் முதன் முதலில் பரணி பாடியவர் இவரே. இவரது வரலாறு அறியப்படவில்லை. இவரது காலம் கி.பி. 12ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாக இருக்கலாம் என அறியப்பட்டுள்ளது.

பிற்காலப் புலவரான பலபட்டடைச் சொக்கநாதர் "பரணிக்கோர் செயங்கொண்டார்" என்று சிறப்பித்துப் பாடியுள்ளார். ஒட்டக்கூத்தரும் "தெந்தமிழ்த்தெய்வப் பரணி" என்று இவர் பாடிய பரணியைச் சிறப்பித்துள்ளார்.

புகார் நகர வணிகப் பெருமக்களைச் சிறப்பித்து இசை ஆயிரம் என்ற நூலையும் பாடியுள்ளார். அத்துடன் விழுப்பரையர் மீது உலாமடல் என்னும் நூலையும் பாடியுள்ளார்.[1]

சான்றுகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செயங்கொண்டார்&oldid=3067994" இருந்து மீள்விக்கப்பட்டது