செயசிறீ காடில்கர் பாண்டே

இந்திய சதுரங்க வீராங்கனை

செயசிறீ காடில்கர் பாண்டே (Jayshree Khadilkar Pande) என்பவர் ஓர் இந்திய சதுரங்க விளையாட்டு வீராங்கனை ஆவார். இவர் 1962 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் நாள் பிறந்தார். 1979 ஆம் ஆண்டு பெண் அனைத்துலக மாசுட்டர் என்ற பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது. இந்த தகுதியைப் பெற்ற முதலாவது இந்திய சதுரங்க வீராங்கனை என்ற பெருமை இவருக்கு உண்டு [2]. இந்திய பெண்கள் சாம்பியன் பட்டத்தை நான்கு முறை செயசிறீ வென்றுள்ளார் [3]

செயசிறீ காடில்கர் பாண்டேJayshree Khadilkar Pande
ரியோடி செனிரோ, 1979
நாடுஇந்தியா
பிறப்பு1962 ஏப்ரல் 25
பட்டம்அனைத்துலக பெண்கள் மாசுட்டர் (1979)
பிடே தரவுகோள்2120 [செயல்பாடில்லை]
உச்சத் தரவுகோள்2120 (சனவரி 1987)[1]
1880 வல்லெட்டா சதுரங்க ஒலிம்பியாடில் காடில்கர் சகோதரிகள்

.

காடில்கர் சகோதரிகள் வசந்தி , செயசிறீ, ரோகிணி மூவரும் இந்திய பெண்கள் சதுரங்கச் சாம்பியன் பட்டப் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தினர். போட்டிகளின் முதல் பத்தாண்டுகளில் அனைத்து பட்டங்களையும் இவர்களே வென்றனர் [3]. நவகாளி என்ற செய்தித்தாளில் ஆசிரியர், அச்சிடுபவர், வெளியிடுபவர் என்ற பன்முகங்கள் செயசிறீக்கு சொந்தமானவையாகும் [4].

மேற்கோள்கள்

தொகு
  1. Khadilkar, Jayshree FIDE rating history, 1979-2001 at OlimpBase.org
  2. D.K. Bharadwaj (2003-05-13). "A big boom in the brain game". Press Information Bureau, Government of India.
  3. 3.0 3.1 Menon, Ajay (3 June 2012). "Anand’s win fires former chess whiz from Girgaon". ஹிந்துஸ்தான் டைம்ஸ் (Mumbai) இம் மூலத்தில் இருந்து 8 ஆகஸ்ட் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140808060700/http://www.hindustantimes.com/comment/columnsothers/anand-s-win-fires-former-chess-whiz-from-girgaon/article1-865227.aspx. பார்த்த நாள்: 5 August 2014. 
  4. "Information box at bottom-left on Page 11" (in Marathi). Nava Kaal (Mumbai) இம் மூலத்தில் இருந்து 20 பிப்ரவரி 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150220125518/http://navakal.org/images/epaper.pdf. பார்த்த நாள்: 5 August 2014.