செயிண்ட் கிளையார் அருவி
(செயிண்ட். கிளயார் நீர்வீழ்ச்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
செயிண்ட். கிளயார் நீர்வீழ்ச்சி இலங்கையின் மத்திய மாகாணத்தில் A7 பெருந்தெருவில் கொட்டகலை - தலவாக்கலை நகரகங்களுக்கிடையில் அமைந்துள்ளது. மகாவலி கங்கையின் முக்கிய கிளையாறான கொத்மலை ஆற்றில் அமைந்துள்ளது. இலங்கையின் மிக அகலமான நீர்வீழ்ச்சியாகும். மொத்தம் 109 மீட்டர் (265 அடி) உயரத்தை முக்கிய இரண்டு படிநிலைகளில் பாய்கிறது. இதனை பெருந்தெருவில் இருந்தோ அல்லது இலங்கை தொடருந்தின் கொழும்பு - பதுளை பாதையில் தலவாக்கலை நகருக்கணைமிலோ இதனை பார்வையிட முடியும். இதற்கருகாமையில் டெவோன் நீர்வீழ்ச்சி, செயிண்ட். அன்றுவ் நீர்வீழ்ச்சி என்பன அமைந்துள்ளன. மேல் கொத்மலை நீர் மின் திட்டம் காரணமாக இந்நீர்வீழ்ச்சி வறண்டுப்போகும் அபாயத்துக்கு உள்ளாகியுள்ளது.[1][2][3]
செயிண்ட். கிளயார் நீர்வீழ்ச்சி | |
---|---|
செயிண்ட். கிளயார் 2005 மார்ச் தோற்றம் | |
அமைவிடம் | மத்திய மாகாணம் |
ஏற்றம் | 1186 மீட்டர் |
மொத்த உயரம் | 109 மீட்டர் (265 அடி) |
வீழ்ச்சி எண்ணிக்கை | 2 |
நீர்வழி | கொத்மலை ஆறு (மகாவலி கங்கை) |
மேற்கோள்கள்
தொகு- ↑ Kautzsch, Eberhard (1983). A Guide to Waterfalls of Sri Lanka. Dehiwala: Tisara Prakasakayo. p. 50.
- ↑ De Silva, Rajpal Kumar (1998). 19th century newspaper engravings of Ceylon-Sri Lanka. Serendib Publications. p. 368. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780951071021.
- ↑ "St Clair's Falls". Amazing Lanka. பார்க்கப்பட்ட நாள் 19 October 2015.