செயிண்ட் கிட்சு

செயிண்ட் கிட்சு (Saint Kitts), முறையாக செயிண்ட் கிறித்தோபர் தீவு, மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த ஓர் தீவு ஆகும்.இத்தீவின் மேற்கே கரிபியன் கடலும், கிழக்கே அத்திலாந்திக்குப் பெருங்கடலும் உள்ளன. செயிண்ட் கிட்சும் அருகிலுள்ள நெவிசு தீவும் இணைந்து ஒரே நாடாக உள்ளன: செயிண்ட் கிட்சும் நெவிசும் கூட்டாட்சி.

செயிண்ட் கிட்சு மாநிலம்
Nickname: "சர்க்கரை நகரம்"
செயிண்ட் கிட்சையும் நெவிசையும் காட்டும் நிலப்படம்
புவியியல்
அமைவிடம்கரிபியக் கடல்
ஆள்கூறுகள்17°15′N 62°40′W / 17.250°N 62.667°W / 17.250; -62.667
தீவுக்கூட்டம்லீவர்டு தீவுகள்
மொத்தத் தீவுகள்1
முக்கிய தீவுகள்1
பரப்பளவு176 km2 (68 sq mi)
நீளம்29 km (18 mi)
அகலம்8 km (5 mi)
உயர்ந்த ஏற்றம்1,156 m (3,793 ft)
உயர்ந்த புள்ளிலியாமுய்கா மலை
நிர்வாகம்
செயிண்ட் கிட்சின் 2 கோட்டங்கள்
பெரிய குடியிருப்புபாசெட்டெரே (மக். 15,500)
மக்கள்
மக்கள்தொகை46,000
அடர்த்தி208.33 /km2 (539.57 /sq mi)
இனக்குழுக்கள்ஆபிரிக்க இனத்தவர், முலட்டோ, இந்திய பாக்கித்தானியர், பிரித்தானியர், போத்துக்கீசர், லெபனான் மக்கள்[1]

இத்தீவு சிறிய அண்டிலிசு தீவுக் குழுமத்தின் வளிமறைவுத் தீவுகளில் ஒன்றாகும். இது புளோரிடாவின் மயாமியிலிருந்து தென்கிழக்கே ஏறத்தாழ 2,100 km (1,300 mi) தொலைவில் அமைந்துள்ளது. செயிண்ட் கிட்சின் நிலப்பரப்பு ஏறத்தாழ 168 km2 (65 sq mi) ஆகும்; ஏறத்தாழ 29 km (18 mi) நீளமும் சராசரியாக 8 km (5.0 mi) அகலமும் கொண்டுள்ளது..

செயிண்ட் கிட்சின் மக்கள்தொகை ஏறத்தாழ 45,000 ஆகும். இவர்களில் பெரும்பாலோர் ஆபிரிக்க இனத்தவர் ஆவர். முதன்மையான மொழியாக ஆங்கிலம் உள்ளது.கல்வியறிவு கிட்டத்தட்ட 98% ஆகும்.

கிழக்கு கரிபியனில் கட்டப்பட்ட பெரும் கோட்டையாகவும் உலகப் பாரம்பரியக் களமாகவும் பிரிம்சுடோன் மலைக் கோட்டை தேசியப் பூங்கா விளங்குகின்றது. செயிண்ட் கிட்சு தீவில் உள்ள வோர்னர் பார்க் துடுப்பாட்ட அரங்கத்தில் 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ண ஆட்டங்கள் நடைபெற்றன. இதன்மூலம் ஒரு உலகக் கிண்ண நிகழ்வு நடந்த உலகின் மிகச் சிறிய நாடெனும் பெருமையை செயிண்ட் கிட்சும் நெவிசும் பெற்றது. செயிண்ட் கிட்சில் ரோசு மருத்துவப் பல்கலைக்கழக பள்ளி, விண்ட்சர் மருத்துவ பல்கலைக்கழக பள்ளி, மருத்துவம் மற்றும் நலவாழ்வு அறிவியல் பல்கலைக்கழகம் போன்ற பல உயர் கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன.

காட்சிக்கூடம் தொகு

மேற்சான்றுகள் தொகு

  1. Ben Cahoon (2000). "Saint Kitts and Nevis". WorldStatesmen. Retrieved 17 July 2010.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செயிண்ட்_கிட்சு&oldid=1988634" இலிருந்து மீள்விக்கப்பட்டது