செயின்ட் லாரன்ஸ் வளைகுடா

செயின்ட் லாரன்ஸ் வளைகுடா

தொகு

செயின்ட் லாரன்ஸ் வளைகுடா 1535 ல் ஜாக்ஸ் கார்டியர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது வட அமெரிக்க கடற் கரையில் மிக பெரிய வளைகுடாவான இது அட்லாண்டிக் பெருங்கடலின் ஒரு ஆழ் பகுதியாகும் . மெக்ஸிகோ வளைகுடாவை விட சற்று சிறியது.

எல்லைகள்

தொகு

இதன் கிழக்கு எல்லையில் நியூ பவுண்ட் லேண்டும் தெற்கு எல்லையில் நோவோஸ்காட்டியா நியூ ப்ரேன்ஸ்விக் ஆகியவை உள்ளன. வளைகுடாவின் தென் முனையில் பிரின்ஸ் எட்வெர்ட் தீவும் லாரன்ஸ் ஆற்றின் கழிமுகம் அருகில் அன்டிகாஸ்டி தீவும் உள்ளன.

பயன்

தொகு

1959 இல் ஆழப்படுத்தப்பட்ட செயின்ட் லாரன்ஸ் வளைகுடாவழியே மிக பெரிய கப்பல்கள் பெரும் ஏரிகளின் இறுதி பகுதி வரை செல்கின்றன . வட அமெரிக்க பகுதியினர், அட்லாண்டிக் கடலை கடந்து வணிகம் செய்ய இவ் வளைகுடா பெரிதும் உதவுகிறது. இவ்வளைகுடாவில் ஓதுங்கள் தாழ்ந்த நிலையிலே இருந்தாலும் பல நாள் தொடர்ந்து இருக்கும் .

[1]

  1. அறிவியல் களஞ்சியம் -- தஞ்சை பல்கலை கழகம் -- தொகுதி --10