செய்யுள் உறுப்புகள்
தமிழ்மொழியில், செய்யுள் உறுப்புகள் (elements of prosady} என்பவை ஒரு செய்யுளை அல்லது யாப்பை இயற்றுவதற்குத் தேவைப்படும் அடிப்படை உறுப்புகள் ஆகும். அந்த உறுப்புகள் ஆறுவகைப்படும். அவை,
- எழுத்து
- அசை
- சீர்
- தளை
- அடி
- தொடை ஆகியன வாகும்.
எழுத்து
தொகுஒரு மொழியின் அடிப்படை உறுப்பு எழுத்து ஆகும்.
அசை
தொகுஓர் எழுத்து, தனித்தோ ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் இணைந்தோ தக்க ஒலியுடன் சீருக்கு உறுப்பாகி நின்றால் அஃது அசை எனப்படும்.
அசை இரு வகைப்படும்.
தொகு- நேரசை
- நிரையசை
சீர்
தொகுஅசைகள், ஒன்றோ இரண்டோ மூன்றோ நான்கோ இயைந்து நிற்பது சீராகும்.இது நான்கு வகைப்படும்.
- நேர் நேர்
- நிரை நேர்
- நிரை நிரை
- நேர் நிரை
நான்கு வகைகள்
- ஓர் அசைச் சீர்
- ஈரசைச் சீர்
- மூவசைச் சீர்
- நாலசைச் சீர்
தளை
தொகுசீர்கள், ஒன்றுடன் ஒன்று இயைந்து கட்டுப்பட்டு நிற்பது தளை எனப்படும். இத்தளை நான்கு வகைப்படும்.
- ஆசிரியத்தளை
- வெண்டளை
- கலித்தளை
- வஞ்சித்தளை
அடி வகைகள்
தொகு- குறளடி
- சிந்தடி
- அளவடி
- நெடிலடி
- கழி நெடிலடி
தொடை வகைகள்
தொகு- மோனைத் தொடை
- எதுகைத் தொடை
- முரண் தொடை
- இயைபுத் தொடை
- அளபெடைத் தொடை
- அந்தாதித் தொடை
- இரட்டைத் தொடை
- செந்தொடை
மேற்கோள்கள்
தொகு- ↑ "பொதுத் தமிழ்". சுரா பதிப்பகம். பார்க்கப்பட்ட நாள் 23 சூன் 2017.