செய்யுள் வகைமை

செய்யுள் வகைமை எனவும், செய்யுள் வகை எனவும் குறிப்பிடப்படும் நூல் சிற்றிலக்கிய இலக்கணங்களைக் கூறும் ஒரு நூல். இதன் 12 நூற்பாக்களை நவநீதப் பாட்டியல் என்னும் நூலுக்கு உரை எழுதியவர் தம் உரையில் குறிப்பிட்டுள்ளார். [1] நூல் முழுமைநிலையில் கிடைகவில்லை.

பிள்ளைத்தமிழ், கலம்பகம், மும்மணிக்கோவை, மும்மணிமாலை, நான்மணிமாலை, கைக்கிளை, இசைச்செய்யுள் ஆகிய சிற்றிலக்கியங்களுக்கு இலக்கணம் கூறும் வேற்கோள் பாடல்களாக வருகின்றன.

நூலின் அமைதி நோக்கி இது 9 ஆம் நூற்றாண்டு நூல் எனக் கொள்ளப்பட்டுகிறது.

கருவிநூல்

தொகு
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, முதல் பாகம், பதிப்பு 2005

அடிக்குறிப்பு

தொகு
  1. அவை நவநீதப் பாட்டியல் நூற்பா எண்கள் 31, 33, 36, 42, 66, 96, 99, 104 ஆகிய எட்டு நூற்பாக்களின் உரையில் பேற்கோளாகத் தரப்பட்டுள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செய்யுள்_வகைமை&oldid=1391548" இலிருந்து மீள்விக்கப்பட்டது