செரிஞோலா போர்

(செரிங்யோலா போர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

செரிஞோலா போர் என்பது எசுப்பானிய மற்றும் பிரெஞ்சு படைகளுக்கிடையே, ஏப்ரல் 28, 1503-ல், தென்-இத்தாலியில் உள்ள பாரிக்கு அருகிலுள்ள செரிஞோலாவில் நடந்த யுத்தமாகும். கொன்சாலோ பெர்னாண்டஸ் தெ கோர்தபா தலைமையில், (2000 லான்ஸ்னெஹ்ட்டுகள், 1000-க்குமேலான ஆர்க்வெபசியர்கள் , மற்றும் 20 பீரங்கிகளை உள்ளடக்கி) 6,300 வீரர்களை கொண்ட எசுபானியப் படைகள்; லூயி தர்மான்யாக் தலைமையிலான, (கனரக ஜாந்தார்ம் குதிரைப்படை, சுவிஸ் கூலிப்படை ஈட்டிவீரர்கள், 40 பீரங்கிகளை உள்ளடக்கிய) 9,000 வீரர்களை கொண்ட பிரெஞ்சு படையை வீழ்த்தினர். லூயி தர்மான்யாக் களச்சாவு அடைந்தார். வெடிமருந்து ஆயுதங்களால் வெற்றி வசமாக்கப்பட்ட ஐரோப்பிய போர்களில், முதலாவது இந்தப்போர் ஆகும்.

செரிஞோலா போர்
இரண்டாம் இத்தாலிய போர் பகுதி

லூயி தர்மான்யாக்கின் சடலத்தை கண்டறியும் கொன்சாலோ பெர்னாண்டஸ் தெ கோர்தபா. பெதெரிக்கோ தெ மதராசோ, 1835. பிராதோ அருங்காட்சியகம்.
நாள் ஏப்ரல் 28, 1503
இடம் செரிஞோலா (தற்கால இத்தாலி)
ஐயமற்ற எசுப்பானிய வெற்றி
பிரிவினர்
எசுப்பானியா பிரான்சிய இராச்சியம்
தளபதிகள், தலைவர்கள்
கொன்சாலோ பெர்னாண்டஸ் தெ கோர்தபா
பிரொஸ்பேரோ கொலோனா
பேதுரோ நாவாறோ
பபிரீசியோ கொலோனா
லூயி தர்மான்யாக் 
ஈவ் தலேக்ரு
பியேர் தியூ தெராய்
பலம்
~6,300 வீரர்கள்[1]~9,000 வீரர்கள்[2]
  • 650 பிரெஞ்சு ஜாந்தார்ம்கள்
  • 1,100 இலகுரக குதிரை
  • 3,500 சுவிஸ் பதாதிகள்
  • 2,500-3,500 பிரெஞ்சு பதாதிகள்
  • 40 பீரங்கிகள் (மிகவும் தாமதமாக வந்துசேர்ந்தன)
இழப்புகள்
100 வீரர்கள் 4,000 வீரர்கள்

மேற்கோள்கள்  தொகு

  1. Mallet, p64 - combined strength deducted from contingents
  2. Mallet, p64 - combined strength deducted from contingents

மூலங்கள்  தொகு

  • Batista González, Juan (2007). España Estratégica. Guerra y Diplomacia en la Historia de España. Sílex. ISBN 978-84-7737-183-0
  • Cassidy, Ben. "Machiavelli and the Ideology of the Offensive: Gunpowder Weapons in the Art of War." Journal of Military History 67#2 (2003): 381-404. online
  • Losada, Juan Carlos (2006). Batallas Decisivas de la Historia de España. Punto de Lectura. ISBN 978-84-663-1484-8
  • Mallet, Michael and Shaw, Christine. The Italian Wars 1494-1559. Harlow: Pearson Educated Limited (2012) ISBN 978-0-582-05758-6.
  • Tafiłowski, Piotr (2007). Wojny włoskie 1494-1559. Zabrze: Inforeditions. ISBN 978-83-89943-18-7
"https://ta.wikipedia.org/w/index.php?title=செரிஞோலா_போர்&oldid=2757415" இலிருந்து மீள்விக்கப்பட்டது