செரெண்டிப்பைற்று
செரெண்டிப்பைற்று (Serendibite) என்பது மிகவும் அரிதான கனிமமும் இரத்தினமும் ஆகும். இது முதன்முதலாக 1902 இல் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இதற்கு இலங்கையின் பண்டைய அரபு மொழிப் பெயரான செரெண்டிப் என்ற பெயர் சூட்டப்பட்டது. இது அரிதான இரத்தினக்கற்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
செரெண்டிப்பைற்று | |
---|---|
செரெண்டிப்பைற்று, 1.06 – 4.06 கரட் | |
பொதுவானாவை | |
வகை | நீர்வகை சிலிகேட்டுகள் |
வேதி வாய்பாடு | (Ca,Na)2(Mg,Fe2+)3(Al,Fe3+)3[O2|(Si,Al,B)6O18] |
இனங்காணல் | |
நிறம் | மங்கிய மஞ்சள், நீலப்பச்சை, சம்பல் நீலம், கருப்பு |
படிக அமைப்பு | முச்சரிவு சமச்சீர் மைய முச்சரிவு படிக வகை |
இரட்டைப் படிகமுறல் | {0-11} இல் பல்பிணைப்பு நிலை பொதுவானது |
பிளப்பு | அவதானிக்கப்படவில்லை |
மோவின் அளவுகோல் வலிமை | 6.5 – 7 |
மிளிர்வு | கண்ணாடி சார்ந்தது |
கீற்றுவண்ணம் | வெள்ளை |
ஒளிஊடுருவும் தன்மை | ஓளி புகும், ஒளி புக ஏற்றது, ஓளி புகாது |
அடர்த்தி | 3.42 – 3.52 g/cm3 (அளவிடப்பட்டது) 3.47 g/cm3 (கணக்கிடப்பட்டது) |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (+) |
ஒளிவிலகல் எண் | 1.701 – 1.706 |
பலதிசை வண்ணப்படிகமை | பார்க்கக்கூடியது, பலமானது, நிறம்: பச்சை, நீலம், மஞ்சள், நீலப்பச்சை, மென் மஞ்சள் |
2V கோணம் | அளவிடப்பட்டது: 80° , கணக்கிடப்பட்டது: 80° |
நிறப்பிரிகை | பலமானது |
மேற்கோள்கள் | [1][2] |