செர்கேய் இவனோவிச் பெலியாவ்சுகி

கண்டறிந்த சிறுகோள்கள்: 36
749 மல்சோவியா ஏப்பிரல் 5, 1913
812 அடெலே செப்டம்பர் 8, 1915
849 ஆரா பிப்ரவரி 9, 1912
850 அல்தோனா மார்ச் 27, 1916
851 செல்சிய்யா ஏப்பிரல் 2, 1916
852 விளடிலேனா ஏப்பிரல் 2, 1916
853 நான்சேனியா ஏப்பிரல் 2, 1916
854 பிரோழ்சியா ஏப்பிரல் 3, 1916
855 நியூகோம்பியா ஏப்பிரல் 3, 1916
856 பாக்லுந்தா ஏப்பிரல் 3, 1916
857 கிளாசெனாப்பியா ஏப்பிரல் 6, 1916
885 உல்ரிகே செப்டம்பர் 23, 1917
969 இலியோசாடியா நவம்பர் 5, 1921
978 ஐதாமினாள் மே 18, 1922
981 மார்ட்டினா செப்டம்பர் 23, 1917
995 சுதெம்பெர்கா ஜூன் 8, 1923
1001 குவாசியா ஆகத்து 8, 1923
1004 பெலோபோல்சுகியா செப்டம்பர் 5, 1923
1005 அராகோ செப்டம்பர் 5, 1923
1006 இலாக்ரஞ்சியா செப்டம்பர் 12, 1923
1031ஆர்க்டிகா ஜூன் 6, 1924
1062 இலியூபா அக்தோபர் 11, 1925
1065 அமந்த்சேனியா ஆகத்து 4, 1926
1074பெலியாவ்சுகியா ஜனவரி 26, 1925
1084 தமராத்வா பிப்ரவரி 12, 1926
1086 நடா[1] ஆகத்து 25, 1927
1094 சைபீரியா பிப்ரவரி 12, 1926
1118ஃஆன்சுகியா[1] ஆகத்து 29, 1927
1153 வால்லென்பெர்கியா செப்டம்பர் 5, 1924
1224 ஃபெண்டாசியா[1] ஆகத்து 29, 1927
1621துரூழ்பா அக்தோபர் 1, 1926
1874 கசிவேலியா செப்டம்பர் 5, 1924
1984 ஃபெதுன்சுகீய் அக்தோபர் 10, 1926
2156 கேட் செப்டம்பர் 23, 1917
3134 கோசுதின்சுகி நவம்பர் 5, 1921
4509 கோர்பத்சுகிய் செப்டம்பர் 23, 1917
  1. 1 நிகொலாய் இவனோவுடன்

செர்கேய் இவனோவிச் பெலியாவ்சுகி (Sergey Ivanovich Belyavsky (உருசியம்: Серге́й Ива́нович Беля́вский; திசம்பர் 7, 1883 (யூலியன் நாட்காட்டி: நவம்பர் 25)– அக்தோபர் 13, 1953) ஒரு சோவியத்/உருசிய வானியலாளர் ஆவார்.

இவர் புனித பீட்டர்சுபெர்கில் பிறந்தார். இவர் சோவியத் ஒன்றிய அறிவியல் கல்விக்கழக உறுப்பினர் ஆவார். இவர் வானொளிப்படவியலிலும் வானளவையியலிலும் பணிபுரிந்தார். இவர் மாறு விண்மீன்களின் ஆய்விலும் ஈடுபட்டார். இவர் புனித பீட்டர்சுபெர்கில்/இலெனிஙிராதில் இறந்தார்.

இவர் வால்வெள்ளி C/1911 S3/ (பெலியாவ்சுகியை வெற்றுக் கண்ணால் கண்டறிந்தார். இது இப்போது வால்வெள்ளி 1911 IV அல்லது வால்வெள்ளி 1911g எனப்படுகிறது.

இவர் பல சிறுகோள்களைக் கண்டுபிடித்தார்.

இவர் கிரீமியாவில் உள்ள சிமீசு வன்காணகத்தில் 1937 முதல் 1944 வ்ரையிலான கால இடைவெளியில் புல்கோவோ வான்காணகத்தின் ஏழாம் இயக்குநராக இருந்தார். இங்கு இவர் போரிசு பெட்ரோவிச் கெராசிமோவிச்சுக்குப் பின் சேர்ந்தார்.

வெளி இணைப்புகள்

தொகு