சேர்ஜி பிரின்
செர்ஜே மிகலாயோவிச் பிரின் (Sergey Brin, பி. ஆகஸ்ட், 21 1973) கூகுள் தேடல் இயந்திரத்தின் நிறுவனர்களில் ஒருவர் ஆவார். இவரது பேஜ் ரேங்கிங் அல்காரிதம் ஆனது தேடலை மிக விரைவாகவும், சரியாகவும் கொடுக்க உதவுகிறது. செர்ஜே பிரின் கூகுள் என்னும் நிறுவனத்தை லாரி பேஜ் என்பவருடன் இணைந்து தொடங்கினார்.
செர்ஜே பிரின் | |
---|---|
2008 டெட் மாநாட்டின் போது | |
பிறப்பு | செர்ஜே மிகலாயோவிச் பிரின் ஆகத்து 21, 1973 மாஸ்கோ, சோவியத் யூனியன் |
இருப்பிடம் | லாஸ் ஆல்டோஸ் ஹில்ஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
தேசியம் | அமெரிக்கர் |
குடியுரிமை | சோவியத் (1973-1979) அமெரிக்கர் (1979 முதல்) |
படித்த கல்வி நிறுவனங்கள் | மேரிலன்ட் பல்கலைக்கழகம் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் |
பணி | கணினியியலாளர், தொழிலதிபர் |
அறியப்படுவது | கூகுள் நிறுவனர்களுள் ஒருவர். |
சொத்து மதிப்பு | $ 17.5 பில்லியன் (2010)[1] |
வாழ்க்கைத் துணை | ஆனி வோஜ்சிக்கி |
வலைத்தளம் | |
stanford.edu/~sergey |
இளமைக்காலம்
தொகுஉருசிய நாட்டின் யூதப் பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார் இவருக்கு ஆறு அகவை ஆனபோது இவருடைய தாய் தந்தையுடன் செர்ஜே மாசுகோவிலிருந்து அமெரிக்காவுக்குக் குடியேறினார். மேரிலாந்து பல்கலைக் கழகத்தில் கணக்கு மற்றும் கணினிக் கல்வி ஆகியவற்றில் கல்வி பயின்று பட்டம் பெற்றார். பின்னர் ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் படிப்பில் ஈடுபட்டார். அவ்வமயம் லாரி பேஜ் என்னும் உடன் பயிலும் மாணவருடன் நட்பு ஏற்பட்டது. இருவரும் இணைந்து 1998 ஆம் ஆண்டில் உலகிலேயே மிகப் பெரிய தேடு பொறியான கூகுளை குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் அளித்த பணத்தை முதலீடாகக் கொண்டு தொடங்கினார்கள்.
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Topic page on Sergey Brin". Forbes. Archived from the original on 2010-11-02. பார்க்கப்பட்ட நாள் 2010-04-05.