லாரி பேஜ்

லாரன்ஸ் எட்வர்ட் "லாரி" பேஜ் (Larry Page, பி. மார்ச்,1973) கூகுள் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர் ஆவார். இவரது பக்கத் தரவரிசை படிமுறைத் தீர்வு (pagerank algorithm) இணையத் தேடலை மிக விரைவாகவும், சரியாகவும் கொடுக்க உதவுகிறது.

லாரி பேஜ்
Larry Page in the European Parliament, 17.06.2009.jpg
ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றத்தில் ஜூன் 17, 2009 இல் பேசும் போது எடுத்த படம்
பிறப்புலாரன்ஸ் பேஜ்
மார்ச்சு 26, 1973 (1973-03-26) (அகவை 50)
கிழக்கு லான்சிங், மிச்சிகன், ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
படித்த கல்வி நிறுவனங்கள்கிழக்கு லான்சிங் உயர்நிலைப் பள்ளி
மிச்சிகன் பல்கலைக்கழகம்
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம்
பணிகணினியியலாளர், தொழிலதிபர்
அறியப்படுவதுகூகுள் நிறுவனர்களுள் ஒருவர். கூகுளின் முதன்மை செயல் அதிகாரி
சொத்து மதிப்புGreen Arrow Up.svg$17.5 பில்லியன் (2010)[1]
வாழ்க்கைத்
துணை
லூசின்டா சவுத்வொர்த்

இளமைக்காலம்தொகு

இவருடைய தாய் தந்தை இருவரும் கணினியியல் வல்லுநர்கள். லாரி பேஜ் பள்ளிப் படிப்புக்குப் பிறகு மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கணினியியல் கல்வி படித்தார். அதற்குப் பின்னர் கலிபோர்னியாவின் ஸ்டான்போர்டில் ஆராய்ச்சிப் பட்டப் படிப்பில் இறங்கினார். அங்கு செர்கே பிரின் என்னும் மாணவருடன் அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் இணைந்து 1998 ஆம் ஆண்டில் உலகிலேயே மிகப் பெரிய தேடு பொறியான கூகுளை, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் அளித்த பணத்தைக் கொண்டு தொடங்கினார்கள்.

மேலும் பார்க்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. Forbes Magazine (2010). "Larry Page". Forbes Magazine. May 18, 2010 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாரி_பேஜ்&oldid=2866643" இருந்து மீள்விக்கப்பட்டது