செர்ரோ டி லாஸ் பட்டாலோன்சு

செர்ரோ டி லாஸ் பட்டாலோன்சு (படைப்பிரிவுகளின் மலை) என்பது மத்ரித் நகரில் (எசுப்பானியா) உள்ள புதைபடிவ தளங்களை கொண்ட மலை ஆகும்.[1][2][3] இது 5.332 முதல் 23.03 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என கணக்கிடப்பட்டுள்ளது. இங்கு ஒன்பது தளங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலும் முதுகெலும்புடன் கூடிய உயிரினங்களின் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. முதுகெலும்பில்லாத மற்றும் தாவரங்களின் படிமங்கள் குறைவான அளவிலேயே உள்ளன. முதல் படிமம் ஜூலை 1991 ல் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது.[3] (பி 10) புதைபடிவ தளம் பழமையான படிமங்களை கொண்டிருப்பதாக கருதப்படுகிறது.

கூரிய பற்களுடைய புலியின் மண்டை ஓடு.
Machairodus aphanistus என்ற விலங்கின் மண்டை ஓடு மற்றும் எலும்புக்கூட்டின் ஒரு பகுதி.
gomphothere Tetralophodon longirostris என்ற விலங்கின் மண்டை ஓடு மற்றும் தாடை.

படிமங்கள் தொகு

கிட்டத்தட்ட அங்கு கண்டுடெடுக்கப்பட்ட படிமங்கள் அனைத்தும் ஊனுண்ணிகளாக இருந்தன. அவற்றில் குறிப்பிடதக்கவை கூரிய பற்களுடைய பூனை இனமும் சிமொக்யான் என்ற ஒரு வகை சிவப்பு பாண்டா கரடியும் ஆகும்.

கொறிணியின் ஒரு புதிய இனம் பல்வேறு தளங்களில் கண்டறியப்பட்டது.[3] B-1 மற்றும் B-10 தளங்களில் ஒரு புதிய மான் இனம் கண்டறியப்பட்டது.[4]

குறிப்புகள் தொகு

சான்றுகள் தொகு