செர்ரோ வேங்குவார்தியா சுரங்கம்

அர்ஜென்டினாவில் உள்ள சுரங்கம்

செர்ரோ வேங்குவார்தியா சுரங்கம் (Cerro Vanguardia Mine) அர்கெந்தீனாவில் உள்ள சாந்தா குரூசு மாகாணத்தில், புயெர்டோ சான் யூலியனுக்கு வடமேற்கில் 150 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தங்கம் மற்றும் வெள்ளி சுரங்கம் ஆகும். உலகளாவிய சுரங்கத் தொழில் நிறுவனமான ஆங்கிலோகோல்டு அசாந்தி லிமிட்டெடு நிறுவனம் இச்சுரங்கத்தின் 92.5% உரிமையையும், எஞ்சியிருக்கும் 7,5% உரிமையை சாந்தா குரூசு மாகாணத்தின் பார்மிகுரூசு நிறுவனமும் வைத்திருக்கின்றன.

செர்ரோ வேங்குவார்தியா சுரங்கம்
Cerro Vanguardia Mine
இடம்
செர்ரோ வேங்குவார்தியா சுரங்கம் is located in அர்கெந்தீனா
செர்ரோ வேங்குவார்தியா சுரங்கம்
செர்ரோ வேங்குவார்தியா சுரங்கம்
அர்கென்தீனாவில் அமைவிடம்
இடம்புவெர்த்தோ சான் யூலியான்
மாகாணம்சாண்டா குரூசு
நாடுஅர்கெந்தீனா
ஆள்கூறு48°23′09″S 068°15′49″W / 48.38583°S 68.26361°W / -48.38583; -68.26361ஆள்கூறுகள்: 48°23′09″S 068°15′49″W / 48.38583°S 68.26361°W / -48.38583; -68.26361
உற்பத்தி
உற்பத்திகள்தங்கம்
வெள்ளி
உற்பத்திதங்கம்: 208,000 அவு.
வெள்ளி: 2,200,000 அவு.
கணக்கு வருடம்2009
வரலாறு
திறப்பு1998
உரிமை
நிறுவனம்ஆங்கிலோகோல்ட் அசாந்தி 92.5%
போர்மிகுரூசு 7.5%
இணையம்ஆங்கிலோகோல்ட்
போர்மிகுரூசு

இச்சுரங்கத்தின் பெரும்பாலான நடவடிக்கைகளை ஆங்கிலோகோல்டு அசாந்தி லிமிட்டெடு நிறுவனம் கட்டுப்படுத்துகிறது. நிறுவனத்தின் 2008 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர உற்பத்தியில் 3% அதிகமான பங்களிப்பையும், அந்த ஆண்டில் கூடுதலாக 1000 பேருக்கு வேலை வாய்ப்பையும் இச்சுரங்கம் அளித்துள்ளது. செர்ரோ வேங்குவார்தியா சுரங்கத்தில் சிறிய திறந்த சுரங்கக் குழிகள் பல உள்ளன.

வரலாறுதொகு

செர்ரோ வேங்குவார்தியாவில் தங்கப்படிவுகள் இருப்பது முதன்முதலில் 1976 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது. 1987 ஆம் ஆண்டு பிரெசு கம்பாங்கு என்பவர் ஆங்கிலோ அமெரிக்கரின் தென் அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து ஒரு கனிம ஆய்வு கூட்டுறவு ஒப்பந்தத்தை முன்னெடுத்தார்.[1]

ஆங்கிலோகோல்டு அசாந்தி நிறுவனத்திற்கு முன்னோடியான ஆங்கிலோகோல்டு 1998-99 ஆம் ஆண்டில் இச்சுரங்கத் திட்டத்தின் 46.23% உரிமையை ஈட்டியது. பிரெசு கம்பாங்குவின் முயற்சியால் இவ்வுரிமை கூடுதலாக 46.25% அதிகமாகி இரட்டிப்பாகியது.

திசம்பர் 1996 இல் யுசுபிரக்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் 40 ஆண்டுகளுக்கு இச்சுரங்கத்தைச் சுரண்டும் உரிமையை ஆங்கிலோகோல்டு அசாந்தி நிறுவனம் தனதாக்கிக் கொண்டுள்ளது. செர்ரோ வேங்குவார்தியா சுரங்கம் 270 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான செலவில் கட்டப்பட்டு 1998 இல் இதற்கான ஆணையம் உருவாக்கப்பட்டது[2].

2008 ஆம் ஆண்டு இச்சுரங்க நிறுவனம் இடர்பாட்டுக்கு உள்ளானது. தங்கம் உற்பத்தியானது 25% அளவிற்கு குறைந்து போனதால் உற்பத்திச் செலவு இரட்டிப்பாக உயர்ந்தது. 2009 ஆம் ஆண்டு இந்நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நிறுவனம், உற்பத்தியளவையும் மேம்படுத்தியதால் உற்பத்திச் செலவு வெகுவாகக் குறைந்தது. தற்பொழுது தொடர்ச்சியான ஏழாவது ஆண்டாக சரிவுக்கு உள்ளாகாமல் வளர்ச்சி முகத்துடன் இயங்கிவருகிறது[3] . 2010 ஆம் ஆண்டு முதல் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை திட்டமிட்டு செர்ரோ வேங்குவார்தியா சுரங்கம் செயல்பட்டு வருகிறது[3]

தங்கம் உற்பத்தித் தரவுகள்தொகு

சமீபத்தில் இங்கு உற்பத்தி செய்யப்பட்ட தங்கத்தின் அளவுகள் இங்கு அட்டவனைப்படுத்தப்பட்டுள்ளன.

ஆண்டு உற்பத்தி (oz) தரம் உற்பத்தி விலை
ஒரு அவுன்சுக்கு
2003 [4] 226,000 7.15 g/t US$ 143
2004 [4] 229,000 7.60 g/t US$ 156
2005 [4] 228,000 7.70 g/t US$ 171
2006 [5] 232,000 7.29 g/t US$ 225
2007 [3] 220,000 6.8 g/t US$ 261
2008 [3] 166,000 5.44 g/t US$ 608
2009 [3] 208,000 6.51 g/t US$ 355
2010

மேற்கோள்கள்தொகு

  1. Cerro Vanguardia Gold and Silver Mine, Argentina mining-technology.com, accessed: 14 July 2010
  2. AngloGold annual Report 2003 AngloGold Ashanti website, accessed: 14 July 2010
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 Annual Report 2009 AngloGold Ashanti website, accessed: 9 May 2010
  4. 4.0 4.1 4.2 Annual Report 2005 AngloGold Ashanti website, accessed: 11 July 2010
  5. Annual Report 2006 AngloGold Ashanti website, accessed: 11 July 2010

புற இணைப்புகள்தொகு