செலீனோசல்பைடு

வேதிச் சேர்ம வகை

செலீனோசல்பைடு (Selenosulfide) என்பது வேதியியலில், கந்தகம் மற்றும் செலீனியம் தனிமங்களைக் கொண்ட கனிம மற்றும் கரிம சேர்மங்களின் தனித்தனி வகுப்புகளைக் குறிக்கிறது. கரிம வழிப்பெறுதிகள் Se-S பிணைப்புகளைக் கொண்டிருக்கின்றன. அதேசமயம் கனிம வழிப்பெறுதிகள் மிகவும் மாறுபடுகின்றன.

டைமெத்தில் செலீனோசல்பைடு, அல்லியத்தின் சில வகைகளில் காணப்படும் ஒரு எளிய செலீனோசல்பைடு.[1]

கரிம செலீனோசல்பைடுகள்

தொகு

இந்த இனங்கள் கரிமக் கந்தகம் மற்றும் கரிம செலீனியம் சேர்மங்கள் என வகைப்படுத்தப்படுகின்றன. இவை கரிம டைசல்பைடுகள் மற்றும் கரிம டைசெலீனைடுகள் ஆகியவற்றின் கலப்பினங்கள் ஆகும்.

தயாரிப்பு

தொகு

செலீனைல் ஆலைடுகளுடன் தயோல்கள் வினைபுரிவதால் செலீனோசல்பைடுகள் உருவாகின்றன.

RSeCl + R'SH -> RSeSR' + HCl

டைசெலீனைடுகள் மற்றும் டைசல்பைடுகளுக்கு இடையிலான சமநிலை இடதுபுறத்தில் உள்ளது:

RSeSeR + R'SSR'   2 RSeSR'

இந்த சமநிலை வசதியின் காரணமாக, செலீனோசல்பைடுகளின் பல சிறந்த எடுத்துக்காட்டுகள் வளையங்களாக உள்ளன. இதன் மூலம் S-Se பிணைப்புகள் உள்மூலக்கூறாக நிலைப்படுத்தப்படுகின்றன. நாப்தலீனின் 1,8-செலீனோசல்பைடு ஓர் உதாரணமாகும்.[2] செலினியம்-கந்தகம் பிணைப்பு நீளம் சுமார் 220 பைக்கோமீட்டர்கள் ஆகும். இது ஒரு வழக்கமான S-S மற்றும் Se-Se பிணைப்பின் சராசரியாக உள்ளது.

தோற்றம்

தொகு

குளுட்டோதயோன் பெராக்சிடேசு மற்றும் தயோரெடாக்சின் ரிடக்டேசு போன்ற பல்வேறு பெராக்சிடேசு நொதிகளின் ஒரு பகுதியாக செலீனோசல்பைடு குழுக்கள் கிட்டத்தட்ட அனைத்து உயிரினங்களிலும் காணப்படுகின்றன. செலினோசிசுட்டீன் மற்றும் சிசுட்டீன் எச்சங்களின் ஆக்சிசனேற்ற பிணைப்பால் இவை உருவாகின்றன.[3] இந்த வினை செல்லுலார் பெராக்சைடுகளின் சிதைவின் மூலம் இயக்கப்படுகிறது. இது மிகவும் சேதத்தை விளைவிக்கும் மற்றும் ஆக்சிசனேற்ற அழுத்தத்தின் மூலமுமாகும். சிசுட்டீனை விட செலினோசிசுட்டீன் குறைவான குறைப்பு ஆற்றலைக் கொண்டுள்ளது. இது ஆக்சிசனேற்ற செயல்பாட்டில் ஈடுபடும் புரதங்களுக்கு மிகவும் பொருத்தமானதாகும்.[4]

ஒருவித்திலை பிரிவைச் சார்ந்த பூக்கும் தாவரமான அல்லியம்[1] மற்றும் வறுத்த காபியில் செலினோசல்பைடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.[5] தயோரெடாக்சின் ரிடக்டேசு என்ற புரதத்தின் பாலூட்டிகளின் பதிப்பில் செலினோசிசுட்டீன் எச்சம் உள்ளது. இது ஆக்சிசனேற்றத்தின் போது தயோசெலீனைடை (டைசல்பைடுக்கு ஒப்பானது) உருவாக்குகிறது.[6]

கனிம செலீனோசல்பைடுகள்

தொகு
 
காட்மியம் சிவப்பு நிறமி

சில கனிம வேதியியல் செலீனோசல்பைடு சேர்மங்களும் அறியப்படுகின்றன. இவற்றில் எளிமையானது செலீலினியம் சல்பைடு ஆகும். இது மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. தனிம கந்தகத்தின் பல்வேறு கட்டமைப்புகளை இது ஏற்றுக்கொள்கிறது. ஆனால் சில கந்தக அணுக்கள் செலீனியத்தால் மாற்றப்படுகின்றன.

மற்ற கனிம வேதியியல் செலீனோசல்பைடு சேர்மங்கள் தாதுக்களாகவும் நிறமிகளாகவும் தோன்றுகின்றன. ஆண்டிமனி செலீனோசல்பைடு இதற்கு உதாரணமாகும்.

காட்மியம் சிவப்பு நிறமி காட்மியம் சல்போசெலீனைடு சேர்மத்தைக் கொண்டதாகும். மஞ்சள் நிறத்தில் உள்ள காட்மியம் சல்பைடு மற்றும் அடர் பழுப்பு நிறத்தில் உள்ள காட்மியம் செலீனைடு ஆகியவற்றின் திண்மக் கரைசல் ஆகும். இது கலைஞர்களின் நிறமியாகப் பயன்படுத்தப்படுகிறது.[7] கரிம செலீனோசல்பைடுகளைப் போலல்லாமலும் செலீனைடு சல்பைடு போலல்லாமலும் CdS1−xSex அல்லது Sb2S3-xSex ஆகியவற்றில் S-Se பிணைப்பு இல்லை.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Cai, Xiao-Jia; Uden, Peter C.; Block, Eric; Zhang, Xing; Quimby, Bruce D.; Sullivan, James J. (1994). "Allium chemistry: Identification of natural abundance organoselenium volatiles from garlic, elephant garlic, onion, and Chinese chive using headspace gas chromatography with atomic emission detection". Journal of Agricultural and Food Chemistry 42 (10): 2081–2084. doi:10.1021/jf00046a002. 
  2. Meinwald, Jerrold; Dauplaise, David; Clardy, Jon (1977). "Peri-Bridged Naphthalenes. 2. Unsymmetrical Diatomic Chalcogen Bridges". Journal of the American Chemical Society 99 (23): 7743–7744. doi:10.1021/ja00465a074. 
  3. Hamsath, Akil; Xian, Ming (2020). "Chemistry and Chemical Biology of Selenenyl Sulfides and Thioseleninic Acids". Antioxidants & Redox Signaling 33 (16): 1143–1157. doi:10.1089/ars.2020.8083. பப்மெட்:32151152. 
  4. "Conformational preferences and pK(a) value of selenocysteine residue". Biopolymers 95 (5): 345–53. May 2011. doi:10.1002/bip.21581. பப்மெட்:21213257. 
  5. Meija, Juris; Bryson, Joshua M.; Vonderheide, Anne P.; Montes-Bayón, Maria; Caruso, Joseph A. (2003). "Studies of Selenium-Containing Volatiles in Roasted Coffee". Journal of Agricultural and Food Chemistry 51 (17): 5116–5122. doi:10.1021/jf034210h. பப்மெட்:12903978. 
  6. Lee, S.-R.; Bar-Noy, S.; Kwon, J.; Levine, R. L.; Stadtman, T. C.; Rhee, S. G. (2000). "Mammalian thioredoxin reductase: Oxidation of the C-terminal cysteine/Selenocysteine active site forms a thioselenide, and replacement of selenium with sulfur markedly reduces catalytic activity". Proceedings of the National Academy of Sciences 97 (6): 2521–2526. doi:10.1073/pnas.050579797. பப்மெட்:10688911. Bibcode: 2000PNAS...97.2521L. 
  7. Hugo Müller, Wolfgang Müller, Manfred Wehner, Heike Liewald "Artists' Colors" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2002, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a03_143.pub2
"https://ta.wikipedia.org/w/index.php?title=செலீனோசல்பைடு&oldid=4150397" இலிருந்து மீள்விக்கப்பட்டது