வண்ணங்களை வெளிப்படுத்தும் நீரில் கரையாத எந்த ஒரு பொருளும் பொதுவாக நிறமி (pigment ) என்று அழைக்கப்படுகிறது. நிறமிகள் கனிமச் சேர்மங்களின் பால் வைக்கப்படுகிறது.[1]

கோவாவில் சந்தையில் விற்கப்படும் நிறமிகள்
சிவப்பு, பச்சை, நீலம் ஆகிய அலைநீளங்களைக் கொண்ட ஒளியானது படிகின்ற பொழுது, சிவப்பும் பச்சையும் உறியப்பட்டு நீலம் வெளிப்படுகிறது. படிந்த பொருள் நீலநிறம் காட்டுகிறது.

பண்புகள்

தொகு

ஒரு பொருளில் உள்ள மூலக்கூறுகளின் பிணைப்பிற்கு ஏற்ப அதன் மேல் படியும் ஒளியின் அலைநீளங்கள் உறியப்படுகின்றன. அப்படி உறிந்தது போக மிச்சம் இருக்கும் அலைநீளங்கள் கற்றையாக வெளிப்படுகின்ற பொழுது, அவை நிறம் அல்லது வண்ணம் எனப்படுகிறது.

மூல ஒளியின் தன்மைக்கு ஏற்ப அலைநீளக் கற்றை மாறுபடுகிறது. கதிரவனில் இருந்து பெறப்படும் வெள்ளை ஒளி சீரான அலைநீளக் கற்றையைக் கொண்டிருப்பதால், பல்வேறு வண்ணங்கள் வெளிப்படுகின்றன.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Völz, Hans G.; Kischkewitz, Jürgen; Woditsch, Peter; Westerhaus, Axel; Griebler, Wolf-Dieter; De Liedekerke, Marcel; Buxbaum, Gunter; Printzen, Helmut; Mansmann (2005), "Pigments, Inorganic", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a20_243.pub2
  2. Thomas B. Brill, Light: Its Interaction with Art and Antiquities, Springer 1980, p. 204

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
நிறமிகள்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிறமி&oldid=3850619" இலிருந்து மீள்விக்கப்பட்டது