செல்மன் வாக்ஸ்மேன்
செல்மன் ஆபிரகாம் வாக்ஸ்மேன் (Selman Waksman) (சூலை 22, 1888 - ஆகஸ்ட் 16, 1973) ஒரு உருஷ்ய சாம்ராஜ்யத்தில் பிறந்த யூத-அமெரிக்க கண்டுபிடிப்பாளர், உயிர்வேதியியலாளர் மற்றும் நுண்ணுயிரியலாளர் ஆவார். மண்ணில் வாழும் உயிரினங்களின் சிதைவு குறித்த ஆராய்ச்சி ஸ்ட்ரெப்டோமைசின் மற்றும் பல நுண்ணுயிர் எதிர்ப்பிகளைக் கண்டுபிடிப்பதற்கு வழிவகுத்தது. ரட்கர்சு பல்கலைக்கழகத்தில் உயிர் வேதியியல் மற்றும் நுண்ணுயிரியல் பேராசிரியராக இருந்த இவர், பல நுண்ணுயிர் எதிர்ப்பிகளைக் கண்டுபிடித்தார். மேலும் பல நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் வளர்ச்சிக்கு வழிவகுத்த நடைமுறைகளையும் இவர் அறிமுகப்படுத்தினார். இவரது காப்புரிமையின் உரிமத்திலிருந்து பெறப்பட்ட வருமானம் நுண்ணுயிரியல் ஆராய்ச்சிக்கான ஒரு அடித்தளமிட நிதியளித்தது. இந்த நிதியினைக் கொண்டு நியூ ஜெர்சி (அமெரிக்கா) பிசுகடாவேயில் உள்ள ரட்கர்சு பல்கலைக்கழக புஷ் வளாகத்தில் அமைந்துள்ள வாக்ஸ்மேன் இன்ஸ்டிடியூட் ஆப் மைக்ரோபயாலஜி நிறுவப்பட்டது. 1952 ஆம் ஆண்டில், "ஸ்ட்ரெப்டோமைசின் கண்டுபிடிப்பிற்கு வழிவகுத்த மண்ணில் வாழும் நுண்ணுயிரிகளின் தனித்துவமான, முறையான மற்றும் வெற்றிகரமான ஆய்வுகளுக்காக" இவருக்கு உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஸ்ட்ரெப்டோமைசின் கண்டுபிடிப்பில் ஸ்காட்ஸின் பங்கைக் குறைத்ததற்காக வாக்ஸ்மேன் மற்றும் இவரது அறக்கட்டளையின் மீது இவரது ஆராய்ச்சி மாணவர்களில் ஒருவரும், ஸ்ட்ரெப்டோமைசின் முதல் கண்டுபிடிப்பாளருமான ஆல்பர்ட் ஷாட் வழக்குத் தொடர்ந்தார். [1]
பிறப்பு | நோவா பிரைலுகா, கியெவ் ஆளுநரகம், உருசியப் பேரரசு (தற்போதைய உக்ரைன்) | சூலை 22, 1888
---|---|
இறப்பு | ஆகத்து 16, 1973 உட்ஸ்ஹோல், பார்ன்ஸ்டேபிள் கௌண்டி, மாசச்சூசெட்ஸ், ஐக்கிய அமெரிக்க நாடுகள் | (அகவை 85)
குடியுரிமை | ஐக்கிய அமெரிக்க நாடுகள் (1916 ஆம் ஆண்டிற்குப் பிறகு) |
Alma mater | ரட்கர்சு பல்கலைக்கழகம் கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி) |
துறை ஆலோசகர் | டி. பிரெய்ல்ஸ்போர்ட் ராபெர்ட்சன் |
பரிசுகள் | அடிப்படை மருத்துவ ஆய்விற்காக ஆல்பர்ட் லாஸ்கெர் விருது (1948) மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (1952) லியூவென்ஹோக் பதக்கம் (1950) |
மேற்கோள்கள்
தொகு- ↑ Kingston, William (2004-07-01). "Streptomycin, Schatz v. Waksman, and the balance of credit for discovery". Journal of the History of Medicine and Allied Sciences 59 (3): 441–462. doi:10.1093/jhmas/jrh091. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-5045. பப்மெட்:15270337. https://archive.org/details/sim_journal-of-the-history-of-medicine-and-allied-sciences_2004-07_59_3/page/441.