செல்வராசா கஜேந்திரன்
செல்வராசா கஜேந்திரன் (Selvarajah Kajendren, பிறப்பு: அக்டோபர் 29, 1974) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[1]
செல்வராசா கஜேந்திரன் | |
---|---|
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் ஆகத்து 2020 – செப்டம்பர் 2024 | |
தொகுதி | தேசியப் பட்டியல் |
பதவியில் 2004–2010 | |
தொகுதி | யாழ்ப்பாண மாவட்டம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 29 அக்டோபர் 1974 |
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி |
பிற அரசியல் தொடர்புகள் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
வாழிடம்(s) | மணல்தரை ஒழுங்கை, கந்தர்மடம், யாழ்ப்பாணம் |
இனம் | இலங்கைத் தமிழர் |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுகஜேந்திரன் 1974 அக்டோபர் 29 இல் பிறந்தார்.[1] 2001/02 காலப்பகுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மாணவர் அமைப்புத் தலைவராக இருந்தார்.[2]
அரசியலில்
தொகுகஜேந்திரன் 2004 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் முன்மொழியப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு,[3] வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[4] 2010 மார்ச்சில், கஜேந்திரனும், ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோரும் இணைந்து கூட்டமைப்பில் இருந்து விலகி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற அமைப்பை ஆரம்பித்தனர்.[5][6]
கஜேந்திரன் 2010 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளராக யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டார். இத்தேர்தலில் இவரது கட்சியைச் சேர்ந்த எவரும் வெற்றி பெறவில்லை.[7][8] 2011 பெப்ரவரியில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.[9] 2015 நாடாளுமன்றத் தேர்தலில் இம்முன்னணியின் வேட்பாளராக யாழ்ப்பாண மாவட்டத்தில் மீண்டும் போட்டியிட்டார், எனினும் இம்முன்னணியின் எந்த உறுப்பினரும் வெற்றி பெறவில்லை.[10][11]
கஜேந்திரன் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளராக மீண்டும் போட்டியிட்டார். ஆனாலும் இவர் தெரிவு செய்யப்படவில்லை.[12][13][14] ஆனாலும், தமிழ்த் தேசிய மக்கள் முனன்ணிக்குக் கிடைத்த ஒரு தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவி இவருக்கு கட்சி வழங்கியது.[15][16]
தேர்தல் வரலாறு
தொகுதேர்தல் | தொகுதி | கட்சி | வாக்குகள் | முடிவு |
---|---|---|---|---|
2004 நாடாளுமன்றம் | யாழ்ப்பாண மாவட்டம் | ததேகூ | 1,12,077 | தெரிவு |
2010 நாடாளுமன்றம் | யாழ்ப்பாண மாவட்டம் | ததேமமு | தெரிவு செய்யப்படவில்லை | |
2015 நாடாளுமன்றம் | யாழ்ப்பாண மாவட்டம் | ததேமமு | தெரிவு செய்யப்படவில்லை | |
2020 நாடாளுமன்றம் | யாழ்ப்பாண மாவட்டம் | ததேமமு | தெரிவு செய்யப்படவில்லை(தேசியப் பட்டியல் மூலம் தெரிவு)[15] |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Directory of Members: Hon. Selvarajah Kajendren, M.P." Sri Jayawardenepura Kotte, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் 18 September 2020.
- ↑ "Jaffna Uni students hold balance of power". The Nation. 28 March 2010 இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304030238/http://www.nation.lk/2010/03/28/news2.htm.
- ↑ D. B. S. Jeyaraj (3 April 2010). "Tamil National Alliance enters critical third phase-2". Daily Mirror இம் மூலத்தில் இருந்து 16 May 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100516020551/http://www.dailymirror.lk/print/index.php/opinion1/7441.html.
- ↑ "General Election 2004 Preferences" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2010-03-04.
- ↑ டி. பி. எஸ். ஜெயராஜ் (17 April 2010). "T.N.A. Performs creditably in parliamentary elections". Daily Mirror இம் மூலத்தில் இருந்து 28 April 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100428064301/http://www.dailymirror.lk/print/index.php/opinion1/8325-tna-performs-creditably-in-parliamentary-elections.html.
- ↑ "Tamil National Peoples Front launched in Jaffna". தமிழ்நெட். 1 March 2010. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=31285.
- ↑ "PART I : SECTION (I) — GENERAL Government Notifications THE PARLIAMENTARY ELECTIONS ACT, No. 1 OF 1981 Notice Under Section 24(1) GENERAL ELECTIONS OF MEMBERS OF THE PARLIAMENT". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1643/07. 2 March 2010. http://www.documents.gov.lk/Extgzt/2010/PDF/Mar/1643_7/1643_7(E).pdf.
- ↑ "Parliamentary General Election - 2010 Jaffna District Final District Result". Department of Elections, Sri Lanka. Archived from the original on 2014-11-01.
- ↑ "TNPF announces Central Committee, prepares party constitution". தமிழ்நெட். 24 February 2011. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=33589.
- ↑ "PART I : SECTION (I) — GENERAL Government Notifications THE PARLIAMENTARY ELECTIONS ACT, No. 1 OF 1981 Notice Under Section 24(1) GENERAL ELECTIONS OF MEMBERS OF THE PARLIAMENT". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1923/03. 13 July 2015. http://www.documents.gov.lk/Extgzt/2015/PDF/Jul/1923_03/1923_03E.pdf.
- ↑ "Parliamentary Election - 17-08-2015 Electoral District: Jaffna Final District Result". Department of Elections, Sri Lanka. Archived from the original on 2015-09-07.
- ↑ "Part I : Section (I) — General - Government Notifications - Parliamentary Elections Act, No. 1 of 1981" (PDF). இலங்கை அரச வர்த்தமானி Extraordinary. No. 2187/26. Colombo, Sri Lanka. 8 August 2020. p. 6A. பார்க்கப்பட்ட நாள் 9 August 2020.
- ↑ "General Election 2020: Preferential votes of Jaffna District". Ceylon Today (Colombo, Sri Lanka). 7 August 2020 இம் மூலத்தில் இருந்து 27 அக்டோபர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201027094033/https://ceylontoday.lk/news/general-election-2020-preferential-votes-of-jaffna-district. பார்த்த நாள்: 18 September 2020.
- ↑ Parasuraman, Lakshme (9 August 2020). "Over 60 new faces in Parliament". Sunday Observer (Colombo, Sri Lanka). http://www.sundayobserver.lk/2020/08/09/news-features/over-60-new-faces-parliament. பார்த்த நாள்: 7 September 2020.
- ↑ 15.0 15.1 "National List members of SLPP, AITC, ITAK gazetted". Ceylon Today (Colombo, Sri Lanka). 11 August 2020 இம் மூலத்தில் இருந்து 13 ஜூன் 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210613151647/https://ceylontoday.lk/news/national-list-members-of-aitc-itak-gazetted. பார்த்த நாள்: 8 September 2020.
- ↑ "SLPP, ITAK & ACTC National List MPs announced via Extraordinary Gazette". நியூஸ் பெர்ஸ்ட் (Colombo, Sri Lanka). 10 August 2020. https://www.newsfirst.lk/2020/08/10/slpp-itak-actc-national-list-mps-announced-via-extraordinary-gazette/. பார்த்த நாள்: 8 September 2020.