செல்வி திருச்சந்திரன்

செல்வி திருச்சந்திரன் (மானிப்பாய், யாழ்ப்பாணம், இலங்கை) ஈழத்து எழுத்தாளர். தற்சமயம் கொழும்பில் வாழ்கிறார். இவர் பெண்நிலை, வர்க்கம், பண்பாடு, பால் நிலை போன்ற பல விடயங்களை ஆய்வு செய்து எழுதி நூலாக்கியுள்ளார். நிவேதினி என்ற பெண்நிலைவாத சஞ்சிகையின் ஆசிரியராகவும் இருக்கிறார்.

பட்டங்கள்

தொகு

இவர் தனது கலைமானிப் பட்டத்தை இலங்கைப் பேராதனைப் பல்கலைக் கழகத்திலும், கலாநிதிப் பட்டத்தினை அம்ஸ்டாம் Vrije பல்கலைக்கழகத்திலும் பெற்றிருக்கிறார்.

தொழில்

தொகு

கொழும்பில் உள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் நிறைவேற்று இயக்குனராகப் பணியாற்றுகிறார்.

எழுதிய நூல்கள்

தொகு

 • Feminine Speech Transmissions
 • Ideology, Caste, Class and Gender
 • Patriarchal World View of Hinduism in Sri Lanka
 • Socialist Women of Sri Lanka
 • Stories from the Diaspora: Tamil Women Writings
 • The Politics of Gender and Women´s Agency in Post-colonial Sri Lanka
 • The Dillema of Theories
 • The Other Victims of War
 • The Spectrum of Femininity : A Process of Deconstruction
 • Women's Writings in Sri Lanka
 • Women's Writings Subjectivities and Historicism
 • Women, Narration and Nation: collective images and multiple identities
 • Women's Movement in Sri Lanka: history, trends, and trajectories
 • Writing Religion: locating women
 • தமிழ் வரலாற்றுப் படிமங்கள் சிலவற்றில் ஒரு பெண்ணிலை நோக்கு
 • பெண்களின் வாய்மொழி இலக்கியம்: தாலாட்டு ஒப்பாரி பற்றிய ஒரு சமூகவியல் நோக்கு
 • பெண்நிலைவாதமும் கோட்பாட்டு முரண்பாடுகளும் ஒரு சமூகவியல் நோக்கு
 • மதப்பண்பாட்டின் கோலங்களையும் கருத்தியலையும் கட்டவிழ்க்கும் ஒரு பால்நிலை நோக்கு
 • மாற்றுச் சிந்தனையும் விரிபடு களமும்
 • வர்க்கம் சாதி பெண்நிலை பண்பாடு
 • வாழ்வியல் சமதர்மக் கோட்பாடுகளுடன் முரண்பட்டு நிற்கும் மேட்டுநிலை பண்பாட்டுக் கோலங்கள்
 • பெண் விடுதலை வாதத்தின் பிரச்சினை மையம்: அது ஒரு மேலைத்தேய கோட்பாடா?
 • பெண்ணடிமையின் பரிமாணங்களும் பெண்ணுரிமையின் விளக்கமும்
 • புனைவுகள், நினைவுகள், நிஜங்கள் - ஒரு ஆய்வு தொகுப்பு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=செல்வி_திருச்சந்திரன்&oldid=3507648" இலிருந்து மீள்விக்கப்பட்டது