செல் உயிரியற்பியல்

செல் உயிரியற்பியல் (Cell biophysics) என்பது செல் செயல்பாடுளில் அடங்கியுள்ள அடிப்படை இயற்பியல் கோட்பாடுகளில் கவனம் செலுத்தும் உயிரியற்பியலின் ஒரு துணைப்பிரிவாகும். இப்பிரிவை செல்லுலார் உயிரியற்பியல் துறை என்றும் அழைக்கிறார்கள். இத்துணைப்பிரிவில் தற்போது மூலக்கூற்று இயந்திரங்கள், செல்சவ்வு மற்றும் உயிரணுக்கூடு உள்ளிட்ட செல் இயக்கவியல் செயல்பாடுகள், செல்லிடைப் போக்குவரத்து, செல்லிடை சமிக்ஞை இயங்கியல், உயிரியல் மின்சாரம், மரபணு வலையமைப்புக் கோட்பாட்டின் புள்ளிவிவர மாதிரிகள் போன்றவையும் நடைமுறையில் ஆராயப்படுகின்றன[1]. இயங்கும்-செல் மூலக்கூறு உருவரைவு நுட்பங்கள் என்ற சமீபத்திய முன்னேற்றங்களினால் இந்த அறிவியல் புலம் பெரிதும் பயனடைந்துள்ளது. பெருமூலக்கூறுகளின் இடஞ்சார்ந்த மற்றும் தற்காலிக அளவீட்டையும் பெருமூலக்கூறுகளின் செயல்பாட்டையும் இந்நுட்பங்கள் அனுமதிக்கின்றன. மின்னணு ஆற்றல் மாற்ற முறையான பார்சுடர் ஒத்திசைவு ஆற்றல் மாற்றம். செல்லின் விரவலை உறுதிப்படுத்த உதவும் ஒளிவெளிர்ப்புக்கு பின் ஒளிர்வு மீட்பு செயல்முறை, ஒளிச்செயலூக்கம் மற்றும் ஒற்றைச் செல் உருவரைவு போன்ற சிறப்பு உருவரைவு நுட்பங்கள் பெருமூலக்கூறுகளின் போக்குவரத்தையும், அவற்றுக்கிடையிலான இடைவினைகளையும், புரதங்களில் மாறுபடும் இணக்க மாற்றங்களையும் வரைந்து இந்த அறிவியல் புலத்திற்கு இந்நுட்பங்கள் மிகுந்த பயனுள்ளவை என நிருபிக்கப்பட்டுள்ளன. மீகூறாக்க நுண்ணோக்கியியல் செல்லின் கட்டமைப்பை ஒளியியல் தெளிவுத்திறனுக்குக் கீழே உருவரைவு செய்ய அனுமதிக்கிறது. இயற்பிய அறிவியலில் அடித்தளமாக உள்ள கணித மாதிரிகளுடன் புதிய சோதனைக் கருவிகளை இணைத்தது இந்த துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. உலகெங்கிலும் உள்ள பல ஆராய்ச்சி மையங்கள் புலத்தின் இந்த மேம்பாட்டை நோக்கி நகர்ந்து வருகின்றன[2][3].

மேற்கோள்கள்

தொகு
  1. Phillips, Rob; Kondev, Jan; Theriot, Julie (2008). Physical Biology of the Cell. Garland Science, Taylor and Francis group.
  2. "Molecular and Cellular Biophysics". பார்க்கப்பட்ட நாள் April 4, 2014.
  3. "Center for the Physics of Living Cells". பார்க்கப்பட்ட நாள் April 4, 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செல்_உயிரியற்பியல்&oldid=2896661" இலிருந்து மீள்விக்கப்பட்டது