செவாலியர் டி.தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரி
செவாலியர் டி.தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரி வட சென்னை பெரம்பூர் பகுதியில் உருவான முதல் பெண்கள் சுயநிதிக் கல்லூரி. 1985 இல் இக்கல்லூரி தொடங்கப்பட்டது[1]. இக்கல்லூரி பெண்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றது[2]. ஏறத்தாழ 35 ஆண்டுகாலமாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக்கல்லூரியாக இணைவு பெற்றுள்ள சுயநிதி கல்லூரி ஆகும்[3]. இக்கல்லூரியில், கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகள் ஆங்கில வழியில் கற்பிக்கப்பட்டுவருகிறது. தற்போது 2500 க்கும் மேற்பட்ட மாணவியர் கற்கின்றனர். NAAC - தேசிய தர மற்றும் மதிப்பீடு ஆணையத்தின் இரண்டாம் சுழற்சியில் 'A' அங்கீகாரம் பெற்றுள்ளது[4].
வகை | தனியார் |
---|---|
உருவாக்கம் | 1985 |
மாணவர்கள் | 2500 |
அமைவிடம் | , , |
சேர்ப்பு | சென்னைப் பல்கலைக்கழகம் |
இணையதளம் | https://www.cttewc.edu.in/ |
அமைவிடம்
தொகுசெவாலியர் டி.தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரி, தமிழ்நாட்டில் சென்னையில், மாதவரம் மூலக்கடை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. சி.டி.டி.இ. மகளிர் கல்லூரி எனச் சுருக்கமாகவும் அழைக்கப்படுகிறது. பெரம்பூர் ரயில் நிலையமும் மூலக்கடை செம்பியம் பகுதியில் அமைந்துள்ள சிம்சன் தொழிற்பேட்டையும் இக்கல்லூரியை எளிதில் அடையாளம் காண்பிக்கும் நிலக்குறீயீடு. [5].
நிர்வாகம்
தொகுசெவாலியர் டி.தாமஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட புனித மேரி கல்வி அறக்கட்டளையின் கீழ் இக்கல்லூரி இயங்கிவருகிறது. இக்கல்லூரியின் நிறுவனர் திருமதி எலிசபெத் தாமஸ். தலைவர் - நீதியரசர் திரு ஜே.கனகராஜ்: தாளாளர் - திரு இல.பழமலை, (இ.ஆ.ப. ஓய்வு): கல்லூரி முதல்வர் - முனைவர் திருமதி ஹனீஃபா கோஷ்.
படிப்புகள்
தொகுஇக்கல்லூரியில் பின்வரும் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன[6].
- கலை அறிவியல் இளங்கலை
- கலை அறிவியல் முதுகலை
- ஆய்வியல் நிறைஞர் பட்டப் படிப்புகள்
சான்றுகள்
தொகு- ↑ https://collegedunia.com/college/817-chevalier-tthomas-elizabeth-college-for-women-cttewc-chennai
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-12-18. பார்க்கப்பட்ட நாள் 2020-05-22.
- ↑ https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=699&cat=1&subtype=college
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-12-18. பார்க்கப்பட்ட நாள் 2020-05-22.
- ↑ https://www.google.com/maps/place/Chevalier+T+Thomas+Elizabeth+College+for+Women/@13.1239771,80.2445018,15z/data=!4m5!3m4!1s0x0:0x2a6abbe94d5ce765!8m2!3d13.1239771!4d80.2445018
- ↑ https://collegedunia.com/college/817-chevalier-tthomas-elizabeth-college-for-women-cttewc-chennai/courses-fees