செவியழற்சி
செவியழற்சி (Otitis) என்பது மனிதர்கள் மற்றும் பிற விலங்குகளின் செவிகளில் ஏற்படும் அழற்சி அல்லது நோய்த்தொற்றைக் குறிக்கிறது.
செவியழற்சி | |
---|---|
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
ஐ.சி.டி.-9 | 380.10 |
மெரிசின்பிளசு | 001336 |
ம.பா.த | D010031 |
இது கீழ்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது:
- புறச்செவியழற்சி (Otitis externa, swimmer's ear) புறச்செவி, செவிக்குழல் ஆகியவற்றில் ஏற்படும் அழற்சியைக் குறிக்கிறது[1]. இந்நிலையில் காதுகளைத் தொட்டாலோ, இழுத்தாலோ வலிக்கும்.
- இடைச்செவியழற்சி (Otitis media) என்பது இடைச்செவியில் ஏற்படும் அழற்சியைக் குறிக்கும்[2]. சாதரணமாகக் குழந்தைகளில் இத்தகைய நோய்த்தொற்று ஏற்படுகிறது. இந்நிலையில் காதுகள் நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டோ அல்லது செவிப்பறைக்குப் பின்புறம் சாதரணமாகக் காற்றினால் நிரப்பப்பட்ட இடைச்செவி வெளி, திரவத்தினால் அடைக்கப்பட்டோ காணப்படும். சிலநேரங்களில் அறுவைச் சிகிச்சைத் தேவைப்படலாம்.
- உட்செவியழற்சி (Otitis interna, labyrinthitis) உட்செவியில் ஏற்படும் அழற்சியைக் குறிக்கும். சமநிலை, கேட்கும் திறன் ஆகியவற்றின் உணர் உறுப்புகள் உட்செவியில் உள்ளன. எனவே, கிறுகிறுப்பு (vertigo) உட்செவியழற்சியில் சாதாரணமாகக் காணப்படும் அறிகுறியாகும்[3].
மேற்கோள்கள்
தொகு- ↑ Rapini, Ronald P.; Bolognia, Jean L.; Jorizzo, Joseph L. (2007). Dermatology: 2-Volume Set. St. Louis: Mosby. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4160-2999-0.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Qureishi, A; Lee, Y; Belfield, K; Birchall, JP; Daniel, M (10 January 2014). "Update on otitis media - prevention and treatment.". Infection and drug resistance 7: 15-24. doi:10.2147/IDR.S39637. பப்மெட்:24453496.
- ↑ Hogue, JD (June 2015). "Office Evaluation of Dizziness.". Primary care 42 (2): 249-258. பப்மெட்:25979586.