செஹரா (தலைக்கு அணியும் ஆடை)
ஒரு செஹரா'அல்லது செஹ்ரோ அல்லது முண்டவல்யா[1] அல்லது பாசிகம்[2] என்பது இந்திய துணைக்கண்டத்தில் திருமணங்களின் போது மணமகன் (அல்லது சில சமயங்களில் மணமகள் கூட) நெற்றியில் அணியும் ஒரு மாலை/கிரீடம். வங்காளதேசம், இந்தியா மற்றும் பாக்கித்தான் போன்ற நாடுகளில் மணமகன் முகத்தில் தொங்கும் மாலைகளைப் வடிவமைப்பை உள்ளடக்கியும் இருக்கும்.[3] நாட்டின் பிற பகுதிகளை விட வட இந்தியாவில் அவை மிகவும் முக்கியமாக அணியப்படுகின்றன. அவை தீயவர்களின் வார்வையைத் தடுக்கும் நோக்கம் கொண்டவையாகவும், மணமகனும், மணமகளும் திருமணத்திற்கு முன்பு ஒருவரையொருவர் பார்க்கக்கூடாது என்பதற்காகவும் இது அணியப்படுகிறது.
பெயர்க் காரணம்
தொகுசெஹ்ரா என்ற வார்த்தை சமசுகிருத வார்த்தையான "சீர்சாகரா" (शीर्षहार) என்பதிலிருந்து உருவானது.[4] அதாவது தலையை அலங்கரிப்பதற்கான மாலை எனப் பொருள். செஹ்ரா என்ற வார்த்தை இந்து சமய சீர்திருத்தவாதியாதியான சூர்தாசரின் பிராஜ் கவிதையில் குறிப்பிடப்பட்டுள்ளது.[4]
- ↑ Untracht, Oppi (February 1997). Traditional Jewelry of India (in ஆங்கிலம்). Harry N. Abrams. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8109-3886-1.
- ↑ Brown, Charles Philip (1903). "A Telugu-English Dictionary. New ed., thoroughly rev. and brought up to date...2nd ed". dsal.uchicago.edu. பார்க்கப்பட்ட நாள் 2023-03-23.
- ↑ "Sehra: Traditional Headdress For Indian Groom". Utsavpedia. 18 June 2014.
- ↑ 4.0 4.1 Dasa, Syamasundara (1965–1975). "Hindi sabdasagara". dsal.uchicago.edu. பார்க்கப்பட்ட நாள் 2023-03-13.