செ. சண்முகையா

செ. சண்முகையா (C. Shunmugaiah) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தினைச் சார்ந்தவர். பட்டதாரியான சண்முகையா பெங்களூரில் உள்ள இராம்மனோகர் லோகியா சட்டக்கல்லூரியில் சட்டப் பட்டமும் 2005-ல் பெற்றுள்ளார். விவசாயக் குடும்பத்தினைச் சார்ந்த சண்முகையா வழக்கறிஞர் தொழிலையும் செய்து வருகின்றார். இவர் 2019-ல் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1] சண்முகையா மீண்டும் 2021ஆம் ஆண்டு மே மாதம் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் இரண்டாவது முறையாகச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

செ. சண்முகையா
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
மே, 2021
தொகுதிஓட்டப்பிடாரம்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு
பதவியில்
மே 2019 – மே 2021
தொகுதிஓட்டப்பிடாரம்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக இடைத்தேர்தல் 2019 முடிவுகள்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-01-28.
  2. "Shunmugaiah C(DMK):Constituency- OTTAPIDARAM (SC)(THOOTHUKUDI) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2022-01-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செ._சண்முகையா&oldid=3380692" இலிருந்து மீள்விக்கப்பட்டது