செ. பெ. கோத்வால்

சொகராப் பெசோதன் கோத்வால் (S. P. Kotval)(செப்டம்பர் 1910 - 6 மார்ச் 1987) [1] பம்பாய் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஆகத்து 1, 1966 முதல் 27 செப்டம்பர் 1972 வரை பணியாற்றியவர் ஆவார்.

செ. பெ. கோத்வால்
தலைமை நீதிபதி, பம்பாய் உயர் நீதிமன்றம்
பதவியில்
1 ஆகத்து 1966 (1966-08-01) – 27 செப்டம்பர் 1972 (1972-09-27)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசெப்டம்பர் 1910
இறப்பு (அகவை 76)
முன்னாள் கல்லூரி
  • மோரிசு கல்லூரி
  • பல்கலைக்கழக சட்டக் கல்லூரி, நாக்பூர்

இவர் தனது பள்ளிக் கல்வியை நாக்பூரில் உள்ள புனித வளனார் கன்னிமாடப் பள்ளியிலும், பின்னர் பஞ்ச்கனியில் உள்ள பில்லிமோரியா உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். இவர் மோரிசு கல்லூரியில் (தற்போது நாக்பூர் மகாவித்யாலயா என்று அழைக்கப்படுகிறது) கல்லூரிக் கல்வியினையும் நாக்பூரில் உள்ள பல்கலைக்கழக சட்டக் கல்லூரியில் இளநிலை சட்டமும் பயின்றார்.

இவர் 1932ஆம் ஆண்டு முதல் நாக்பூரில் உள்ள வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றார். பின்னர் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் பயிற்சி செய்தார். 1956-ல் மாநிலங்களின் மறுசீரமைப்பு தொடர்பாக, இவர் பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் இருக்கையில் நீதிபதியாகப் பதவி வகித்தார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Late Shri S. P. Kotwal, Former Chief Justice, Bombay High Court". Maharashtra Law Journal. 1987. http://bombayhighcourt.nic.in/libweb/references/KotwalSP.PDF. 
  2. "Former Chief Justices". Bombay High Court, Bombay. பார்க்கப்பட்ட நாள் 2 February 2012.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=செ._பெ._கோத்வால்&oldid=3946897" இலிருந்து மீள்விக்கப்பட்டது