சேக்கிழார் புராணம்

சேக்கிழாரின் வரலாற்றை அறிய உதவும் நூல்

சேக்கிழார் புராணம் என்னும் நூல் 14 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. திருத்தொண்டர் வரலாறு என்பது இந்த நூலின் மற்றொரு பெயர். உமாபதி சிவாசாரியார் என்பவர் இதனை எழுதினார். சேக்கிழார் 63 நாயன்மார்கள் வரலாற்றைத் திருத்தொண்டர் புராணம் என்னும் பெயரில் நூலாகச் செய்தவர். சேக்கிழாரின் வரலாற்றை அறிய உதவும் நூல் இது ஒன்றே. இது சைவ உலகில் பெரிதும் பரவி நன்கு போற்றப்பட்டு வந்தது.

அந்த நூலில் 103 பாடல்கள் உள்ளன. அனபாய சோழன் சமண நூலில் மூழ்கிக் கிடந்தான். அதனை மாற்றச் சேக்கிழார் இந்த நூலைச் செய்தார் என்று ‘பெரிய புராணம்’ நூலின் வரலாற்றைச் சேக்கிழார் புராணம் விளக்குகிறது.

கருவிநூல்

தொகு
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேக்கிழார்_புராணம்&oldid=3037860" இலிருந்து மீள்விக்கப்பட்டது