சேக் பாசிலத்துன்னிசா முஜிப்

சேக் பாசிலத்துன்னிசா முஜிப் (Sheikh Fazilatunnesa Mujib) (8 ஆகத்து 1930 [1][2] - 15 ஆகத்து 1975 [3] ) இவர் வங்காளதேசத்தின் முதல் குடியரசுத் தலைவரான சேக் முஜிபுர் ரகுமானின் மனைவியாவார். இவர் தனது கணவர் மற்றும் மூன்று மகன்களுடன் படுகொலை செய்யப்பட்டார்.[4]

சேக் பாசிலத்துன்னிசா முஜிப்
வங்காளதேசத்தின் முதல் பெண்
பதவியில்
11 ஏப்ரல் 1971 – 12 சன்வரி 1972
குடியரசுத் தலைவர்சேக் முஜிபுர் ரகுமான்
பதவியில்
25 சன்வரி 1975 – 15 ஆகத்து 1975
குடியரசுத் தலைவர்சேக் முஜிபுர் ரகுமான்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1930-08-08)ஆகத்து 8, 1930
துங்கிபாரா, கோபால்கஞ்ச்
இறப்புஆகத்து 15, 1975(1975-08-15) (அகவை 45)
டாக்கா, வங்காளதேசம்
Manner of deathபடுகொலை
துணைவர்சேக் முஜிபுர் ரகுமான் (1938–1975)
பிள்ளைகள்அசீனா, கமால், ஜமால், ரகானா,ரஸ்ஸல்

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

இவர் 1930 இல் கோபால்கஞ்ச் மாவட்டத்தின் துங்கிபாரா என்ற இடத்தில் பிறந்தார். இவரது புனைபெயர் ரேணு என்பதாகும். இவருடைய தந்தையும் தாயும் இவரது ஐந்து வயதிலேயே இறந்துவிட்டார்கள். இவர் தனது கணவர் சேக் முசிபூர் ரகுமானின் தந்தைவழி உறவினராவார். இவரௌக்கு மூன்று வயதும், சேக் முஜிப்பிற்கு 13 வயதும் இருந்தபோது, இவர்களது திருமணத்தை குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் நிர்ணயித்திருந்தனர். 1938 இல் கணவருடன் திருமணம் செய்துகொண்டபோது ரேணுவுக்கு 8 வயதுதான் ஆகியிருந்தது. சேக் முஜிப் இவரைவிட 10 ஆண்டு மூத்தவராக இருந்தார். சேக் முஜிபூர் ரகுமானுக்கு திருமணமானபோது பதினெட்டு வயதாக இருந்தது. இந்த தம்பதியினருக்கு சேக் அசீனா மற்றும் சேக் ரகானா என்ற இரு மகள்களும், என்ற மூன்று மகன்களும் பிறந்தனர். திசம்பர் 17 வரை வங்காளதேச விடுதலைப் போரின்போது பசிலத்துன்னிசா முஜிப் வீட்டுக் காவலில் இருந்தார்.

படுகொலை

தொகு

1975 ஆகத்து 15 அன்று, இளைய இராணுவ அதிகாரிகள் குழு குடியரசுத் தலைவர் இல்லத்தை பீரங்கிகளால் தாக்கி முஜிப், அவரது குடும்பத்தினர் மற்றும் தனிப்பட்ட ஊழியர்களை படுகொலை செய்தது. மேற்கு ஜெர்மனிக்கு சென்றிருந்த இவரது மகள்கள் சேக் அசினா வாசித் மற்றும் சேக் ரகானா மட்டுமே தப்பினர். இவர்கள் வங்காளதேசத்துக்கு திரும்ப தடை விதிக்கப்பட்டது. கொல்லப்பட்ட மற்றவர்களில் இவரது 10 வயது மகன் சேக் ரஸ்ஸல், மேலும் இரண்டு மகன்கள் சேக் கமால், சேக் ஜமால், மருமகள் சுல்தானா கமால் மற்றும் ரோசி ஜமால், சகோதரர் அப்துர் ரப் செர்னியாபத் மற்றும் மைத்துனர் சேக் அபு நாசர், மருமகன் சேக் பஸ்லுல் அக் மணி மற்றும் அவரது மனைவி அர்சூ மோனி ஆகியோரும் அடங்குவர்.[5] அதிருப்தி அடைந்த அவாமி லீக் சகாக்கள் மற்றும் இராணுவ அதிகாரிகளால் இந்த சதித்திட்டம் திட்டமிடப்பட்டது. இச்சதியில் முஜிப்பின் சகாவும் முன்னாள் நம்பிக்கைக்குரிய கோண்டக்கர் முஸ்டாக் அகமதுவும் அடங்குவார். பின்னர், முஸ்டாக் அடுத்த குடியரசுத் தலைவரானார். டாக்கா யூஜின் பூஸ்டர் என்ற பத்திரிக்கையில் அப்போதைய அமெரிக்க தூதர் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் அமெரிக்க புலானாய்வு நிறுவனம் ஆட்சி கவிழ்ப்பு மற்றும் இப்படுகொலையில் ஈடுபட்டதாக லாரன்ஸ் லிஃப்ஷால்ட்ஸ் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார்.[6]

முஜிப்பின் மரணம் நாட்டை பல ஆண்டு அரசியல் கொந்தளிப்பில் ஆழ்த்தியது. ஆட்சி கவிழ்ப்புத் தலைவர்கள் விரைவில் தூக்கி எறியப்பட்டனர். தொடர்ச்சியான எதிர் சதி மற்றும் அரசியல் படுகொலைகள் நாட்டை முடக்கியது. 1977 ல் ஒரு சதி இராணுவத் தலைவர் சியாவுர் ரகுமானுக்கு கட்டுப்பாட்டைக் கொடுத்த பின்னர் ஒழுங்கு பெரும்பாலும் மீட்டெடுக்கப்பட்டது. 1978 இல் தன்னை குடியரசுத் தலைவராக அறிவித்த சியாவுர் ரகுமான் இழப்பீட்டு கட்டளைச் சட்டத்தில் கையெழுத்திட்டார். முஜிப்பின் படுகொலை மற்றும் ஆட்சிக் கவிழ்ப்பு சதி செய்த நபர்களுக்கு வழக்குத் தொடுப்பதில் இருந்து விடுபட்டனர்.

மரபு

தொகு

மலேசிய மருத்துவமனை, கே.பி.ஜே ஹெல்த்கேர் என்ற நிறுவனத்துடன் இணைந்து வங்கபந்து நினைவு அறக்கட்டளை என்ற ஒன்றை இவரது நினைவாக கே.பி.ஜே சிறப்பு மருத்துவமனை மற்றும் செவிலியர் கல்லூரியை கட்டியது.[7] இந்த மருத்துவமனையை வங்கதேச பிரதமர் சேக் அசீனா மற்றும் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் ஆகியோர் திறந்து வைத்தனர்.[8] ஈடன் கல்லூரியில் உள்ள ஒரு தங்குமிடத்திற்கு இவரது பெயரிடப்பட்டது.[9] இவரது நினைவாக ராஜசாகி பல்கலைக்கழகத்தில் பெண்கள் தங்குமிடத்திற்கு இவரது பெயரிடப்பட்டது.[10] இவரது பெயரில் அரசு சேக் பாசிலத்துன்னிசா முஜிப் மகிளா கல்லூரி தங்கையில் அமைந்துள்ளது.[11]

குறிப்புகள்

தொகு
  1. "Fazilatunnesa Mujib's birthday today" (in en). Daily Sun. http://www.daily-sun.com/arcprint/details/157406/Fazilatunnesa-Mujib%E2%80%99s-birthday-today/2016-08-08. 
  2. "Begum Mujib: A tribute" (in en). The Daily Star. http://www.thedailystar.net/news-detail-150063. 
  3. "Sheikh Fazilatunnesa Mujib's 81st birth anniversary today" (in en). The Daily Star. http://www.thedailystar.net/news-detail-197727. 
  4. "Cabinet Pays Homage to Bangladesh's Founding President Sheikh Mujibur Rahman". New Age இம் மூலத்தில் இருந்து 22 டிசம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151222121518/http://newagebd.net/146076/cabinet-pays-homage-to-bangladeshs-founding-president-sheikh-mujibur-rahman/. 
  5. {{Cite news|last1=Mahbub|first1=Sumon|title=Bangladesh plunges into mourning Bangabandhu on his 40th death anniversary|url=http://bdnews24.com/bangladesh/2015/08/15/b[தொடர்பிழந்த இணைப்பு]
  6. "In Mourning, In Rage". The Daily Star. http://www.thedailystar.net/frontpage/mourning-rage-127162. 
  7. "PM to take all treatment at home". Dhaka Tribune. BSS இம் மூலத்தில் இருந்து 6 பிப்ரவரி 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160206081231/http://www.dhakatribune.com/bangladesh/2016/feb/05/pm-take-all-treatment-home. பார்த்த நாள்: 10 February 2016. 
  8. "Hasina, Malaysian PM unveil plaque". The Daily Star. UNB. http://archive.thedailystar.net/beta2/news/hasina-malaysian-pm-unveil-plaque/. பார்த்த நாள்: 10 February 2016. 
  9. "Eden College dormitory emptied as it develops cracks after earthquake". bdnews24.com. http://bdnews24.com/bangladesh/2015/04/27/eden-college-dormitory-emptied-as-it-develops-cracks-after-earthquake. பார்த்த நாள்: 10 February 2016. 
  10. "9th RU convocation held". Dhaka Tribune இம் மூலத்தில் இருந்து 15 பிப்ரவரி 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160215232723/http://www.dhakatribune.com/education/2015/jan/18/9th-ru-convocation-held. பார்த்த நாள்: 10 February 2016. 
  11. "Schoolgirls get karate training". The Daily Star. http://archive.thedailystar.net/newDesign/news-details.php?nid=161737. பார்த்த நாள்: 10 February 2016. 

வெளி இணைப்புகள்

தொகு