சேடகன் பெருங்கதை, [1] என்பவன் பெருங்கதை இலக்கியத்தில் வரும் கதை மாந்தர்களில் ஒருவன். வைசாலி என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு சேதி நாட்டை ஆண்ட மன்னன். ஏயர்(கேகயர்) குலத்தவன். இவனுக்குப் பிள்ளைகள் பத்துப் பேர். கார்காலத்தில் மேகம் தோன்றி அழிவதைத் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்த்து துறவு மேற்கொள்ள விரும்பித் தன் மூத்த மகனை அழைத்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றான். அவனும் துறவு பூண விரும்புவதாகச் சொல்லி ஆட்சியை ஏற்க மறுத்துவிட்டான். பின்னர் அவனது தம்பியரும் அண்ணனைப் போலவே கூறி மறுத்துவிட்டனர். கடைசியில் இளையவன் விக்கிரமனை வற்புறுத்தி அவனிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு தந்தையும் ஒன்பது மகன்களும் தவம் இயற்றினர்.

அடிக்குறிப்பு தொகு

  1. =கொங்குவேளிர் (கி.பி. 7 ஆம் நூற்றாண்டு). பெருங்கதை (4 தொகுதிகள்). சென்னை: உ. வே. சாமிநாதையர் பதிப்பு, ஆறாம் பதிப்பு 2000, முதல் பதிப்பு 1934, வெளியீட்டு எண் 40. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேடகன்&oldid=1839578" இலிருந்து மீள்விக்கப்பட்டது