சேந்தனார் திருவிசைப்பா

பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவப் பெருமகனார் சேந்தனார் என்பவரால் இயற்றப்பட்ட மூன்று நூல்கள் திருவிசைப்பா தோகுப்பில் இடம் பெற்றுள்ளன. திருவீழிமிழலை, திரு ஆ அடு துறை, திருவிடைக்கழி என்னும் என்னும் ஊர்களுக்குச் சென்று சேந்தனார் சிவனைப் போற்றிப் பாடிய பாடல்களும், தில்லைக்குப் பாடிய திருப்பல்லாண்டும் இவர் பாடிய திருவிசைப்பாக்கள்.

பாடல் எடுத்துக்காட்டு

பாடலங் காரப் பரிசில்கா(சு) அருளிப்

பழுத்தசெந் தமிழ்மலர் சூடி

நீடலங் காரத்து எம்பெரு மக்கள்

நெஞ்சினுள் நிறைந்துநின் றானை

வேடலங் காரக் கோலத்தின் அமுதைத்

திருவீழி மிழலையூர் ஆளும்

கேடிலங் கீர்த்திக் கனககற் பகத்தைக்

கெழுமுதற்(கு) எவ்விடத் தேனே. [1]

கருவிநூல்

தொகு
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பத்தாம் நூற்றாண்டு, பதிப்பு 2005

அடிக்குறிப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேந்தனார்_திருவிசைப்பா&oldid=1429657" இலிருந்து மீள்விக்கப்பட்டது