சேனாபதி துடுப்பாட்ட விளையாட்டங்கரம்
சேனாபதி துடுப்பாட்ட விளையாட்டங்கரம் (Senapati Cricket Stadium) இந்தியாவின் சார்க்கண்டு மாநிலத்திலுள்ள பொகாரோ எஃகு நகரத்தில் அமைந்துள்ளது. பொகாரோ துடுப்பாட்ட விளையாட்டரங்கம், பொகாரோ எஃகு நகர துடுப்பாட்ட விளையாட்டரங்கம் என்று பல பெயர்களால் இது அழைக்கப்படுகிறது. சில இரஞ்சிக் கோப்பை மற்றும் மாநில அளவிலான துடுப்பாட்ட போட்டிகள் இங்கு நடைபெற்றுள்ளன. 2013 ஆம் ஆண்டு சனவரி மாத நிலவரத்தின்படி தேசிய அளவிலான போட்டிகள் நடைபெறுவதற்கு இந்த அரங்கம் தயாராக இருந்தது.[1][2]
பொகாரோ துடுப்பாட்ட விளையாட்டரங்கம் | |
அமைவிடம் | பொகாரோ எஃகு நகரம் |
---|---|
ஆள்கூறுகள் | 23°39′55″N 86°9′31″E / 23.66528°N 86.15861°E |
உருவாக்கம் | 1995 |
வரலாறு
தொகு1995 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட சேனாபதி விளையாட்டரங்கம் தற்போது பொகாரோ எஃகு தொழிற்சாலையால் பராமரிக்கப்படுகிறது. மாவட்ட அளவு, மாநில அளவு மற்றும் எஃகு தொழிற்சாலைகளுக்கிடையிலான அளவு துடுப்பாட்ட போட்டிகள் தற்போது இங்கு நடைபெற்று வந்தாலும் தேசிய அளவிலான போட்டிகளை நடத்தவும் அரங்கம் தயாராக உள்ளது. தேசிய அளவிலான துடுப்பாட்டப் போட்டிகளை ஏற்பாடு செய்வதற்கான அனைத்து அடிப்படை தேவைகளையும் இந்த அரங்கம் பூர்த்தி செய்கிறது.
பொகாரோ மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் பொதுச் செயலாளர் பி. என். சிங் ஒரு பேட்டியில் கீழ்கண்டவாறு கூறினார்: இரஞ்சி கோப்பை போன்ற தேசிய அளவிலான போட்டிகளை நட்த்துவதற்கு நாங்கள் முயற்சி செய்கிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக வாரிய அளவிலான போட்டிகள் இங்கு நடந்துள்ளன. 2011 ஆம் ஆண்டு இங்கு ஒடிசா மற்றும் சார்க்கண்டு மாநில அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றது. 2012 ஆம் ஆண்டு சார்க்கண்டு அணி மேற்கு வங்காள அணிக்கு எதிராக இங்கு விளையாடியது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Bokaro cricket stadium awaits national matches". The Times of India. 23 January 2013 இம் மூலத்தில் இருந்து 16 பிப்ரவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130216071529/http://articles.timesofindia.indiatimes.com/2013-01-23/ranchi/36504466_1_cricket-clubs-bokaro-steel-plant-national-level. பார்த்த நாள்: 2 February 2013.
- ↑ "Bokaro Steel Limited Cricket Stadium, Bokaro". பார்க்கப்பட்ட நாள் 2 February 2013.